மின்மினி பட விமர்சனம்.. நட்பும் காதலும்
கதை….
பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பிரவினை எப்போது கிண்டல் செய்யும் கௌரவ் பள்ளியில் திறமையான மாணவன்.
ஒருநாள் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது சபரியை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் சபரி.
இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பனின் ஆசையை நிறைவேற்றம் வேண்டும் என முடிவெடுக்கிறார். பெரியவன் ஆன பிறகு இமயமலைக்கில் பைக்கில் பயணம் சென்று சிகரத்தை தொட நினைக்கிறார்..
இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கௌரவின் இதயத்தை நாயகி எஸ்தருக்கு பொருத்துகின்றனர்.. (பாரிமுகிலன்) கௌரவ் பள்ளியிலே தானும் படிக்க விரும்பி அங்கு சேர்கிறார் அப்போது சபரியின் நடவடிக்கைகளை பின் தொடர்கிறார்..
ஒரு கட்டத்தில் பாரிமுகிலனின் நண்பன் சபரி என தெரிய வந்ததும் அவரை பின்தொடர்ந்து இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்ய முடிவு எடுக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை.
நடிகர்கள்….
மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. இவர் திருஷ்யம் படத்தில் மோகன்லாலின் இரண்டாவது மகளாகவும் பாபநாசம் படத்தில் கமலன் இரண்டாவது மகளாகவும் நடித்திருந்தவர்..
எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர்… பள்ளியில் சின்ன சண்டை அவர்களுக்குள் உள்ள நட்பு மோதல் என அனைத்தையும் அழகாக தங்கள் உணர்வுகளில் காட்டி இருக்கின்றனர்.
பாரி முகிலன் கேரக்டரில் நடித்த கௌரவ் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் மூளைச்சாவது அடைந்தாலும் அதுவரையில் அங்குள்ள மாணவர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் மகிழ்விக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருப்பது சிறப்பு.
சபரியாக நடித்திருக்கும் பிரவீன் சாந்தமான மாணவனாக அதே வேலையில் இமயமலையில் பைக் பயணம் செய்யும்போது நல்லதொரு மனிதநேயமிக்க நபராகவும் நடித்திருக்கிறார்..
ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தவே அடுத்தவர் உதவி எதிர்பார்க்கும் பெண்கள் மத்தியில் பைக்கில் ஒற்றை ஆளாக இமயமலையில் பயணம் செல்லும் எஸ்தர் அனில் கேரக்டர் நமக்கு ஆச்சரியமான ஒன்றாகும்.. அதே சமயம் அது அழகாகவே தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
15 வயது பருவ சிறுவர் சிறுமியரை நடிக்க வைத்து அவர்களே வளர்ந்து பெரியவரான பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்களை வைத்து படத்தை இயக்கி வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார் இயக்குனர்.. இதற்காகவே இவரை நிச்சயம் பாராட்டலாம்.
பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இவர்..
கவித்துவமான நட்பையும் காதலையும் சொல்லி இருக்கிறார் பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம்.. இவருக்கு பக்கபலமாக இருந்து இசையுடன் கைகோர்த்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான்..
படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான்.. இந்தப் படத்தை பார்த்தவர்கள் நிச்சயமாக இமயமலைக்கு ஒரு முறை பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என ஏங்குவார்கள்.. ஒருவேளை இமய மலைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த படத்தையாவது பார்க்க வேண்டும் என எண்ணுவார்கள்.. அப்படி ஒரு அழகான காட்சிகளை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். நிலச்சரிவு முதல் அங்குள்ள மக்களின் வாழ்வியலை அழகாக கண்முன் நிறுத்தி இருக்கிறார்..
இடைவேளைக்கு முன்பு வரை பள்ளியில் நடைபெறும் கதை இரண்டாம் பாதியில் இமயமலையில் பைக் பயணம் என இரண்டு அனுபவங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
பொதுவாகவே பைக்கில் பயணம் செய்பவர்கள் தன்னுடன் நண்பர்களை அழைத்துக் கொள்வார்கள்.. ஆனால் இவர்கள் தனியாக செல்வது ஏற்றும் கொள்ளும் படியாக இல்லை.. அதிலும் எஸ்தர் போன்ற ஒரு சின்ன பெண் பெரிய பெரிய பைக்கை எல்லாம் எப்படி ஓட்டி சென்றார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.. ஆனால் காட்சிகளை பார்த்தால் நிச்சயம் நீங்கள் நம்பாமல் இருக்க மாட்டீர்கள்.. வாழ்த்துக்கள்..