படிப்புக்காக எதையும் செய்யலாம் என்று சொல்லும் ‘அப்பு VI STD’ படத்தில் கதாநாயகனான ‘கல்லூரி’ வினோத்!
RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு VI-STD. இப்படத்தில் கல்லூரி, மாரி, ஸ்கெட்ச், அயோத்தி, ஆகிய படங்களில் நடித்த வினோத் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் வீரா,ஜீவன் பிரபாகர், P.L. தேனப்பன், வேலுபிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் திரு. வசீகரன் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார். இசை ஆலன் விஜய், ஒளிப்பதிவு தீபக், படத்தொகுப்பு K.K. விக்னேஷ், சண்டைப்பயிற்சி S.R. ஹரிமுருகன், பாடல்கள் மணி அமுதவன், கலை V.K. நடராஜ். இப்படத்தின் கதை, சென்னை ஹௌசிங் போர்டை மையமாக கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது.
அப்பாவின் கனவை நிறைவேற்ற படிக்க நினைக்கும் பத்து வயது சிறுவன் அப்பு. அப்புவால் தனக்கு மரணம் என நினைத்து அப்புவை கொல்ல துடிக்கும் தர்மா. இவர்கள் இருவருக்கும் இடையே சூழ்நிலையால் ரவுடியான சபாரத்தினம்.முன்பின் அறிமுகமில்லாத இம்மூவரும் சந்திக்கும் புள்ளியில் ஏற்படும் விளைவே கதை.படிப்பதற்காக எதையும் செய்யலாம் என்னும் வித்தியாசமான கதைகளத்துடன் இப்படம் உருவாகியுள்ளதாக இயக்குனர் வசீகரன் பாலாஜி கூறியுள்ளார். விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.