திரை விமர்சனம்

ஜமா விமர்சனம் – தெருக்கூத்து

‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.. நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

கதை…

கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை எதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்..

பாரி இழவழகன் இவரது தந்தை தயா.. தெருக்கூத்து பார்க்க சென்ற தயா ஒரு கட்டத்தில் அதில் ஆர்வமாகி அவரே தெருக்கூத்து கலைஞராகி விடுகிறார்.. ஜமா என்ற பெயரில் நாடகக் கலைக் குழுவை நடத்தி வருகிறார்.

ஒரு கட்டத்தில் தனது நண்பரின் பொறாமையால் இவரது கலைக்குழு கைவிட்டு போகிறது.. ஒரு கட்டத்தில் மரணமும் அடைகிறார்..

தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் போராடும் போராட்டமே இந்த ஜமா..

இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கி கதை நாயகனாக நடித்துள்ளார்.

சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுகப்படம் என்றாலும் அலட்டிக் கொள்ளாத நடிப்பு நடனம் நளினம் என அனைத்திலும் கை தேர்ந்த நடிகராக உயர்ந்து நிற்கிறார் பாரி இளவழகன்.. பெண் வேடமிட்டு குந்தி தேவியாகவும் ஒரு கட்டத்தில் அர்ஜுனனாக இவர் மாறும் அந்த காட்சிகள் பெரும் கைத்தட்டளை பெறும்..

30 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து வந்தாலும் நடிகர் சேத்தனுக்கு இந்த படம் பெரும் பெயரைப் பெற்று தரும்.. சங்கமம் படத்தில் மணிவண்ணனுக்கு கிடைத்த பெயர் போல இவருக்கு கிடைக்கும்..

தன் காதலனுக்காக தன் தந்தையை எதிர்கும் பெண்ணாக அம்மு அபிராமி அசத்தியிருக்கிறார்.. அதே சமயம் காதலன் கலைக்காக காதலை துறக்கும் காட்சியில் கலங்கி நிற்கிறார்..

பூனை என்ற கேரக்டரில் வரும் வசந்த் தன் கேரக்டரை உணர்ந்து ஆங்காங்கே ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

இவரைப் போல கூத்துக் கலைஞனாக வரும் மாரிமுத்து உள்ளிட்டோரும் ரசிக்க வைக்கின்றனர்.. பெரும்பாலும் இதுபோல கலை குழுவில் இருக்கும் கலைஞர்களுக்கு போட்டி பொறாமை அதிகம் இருக்கும்.. அதை இந்த படத்திலும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு..

 

கலை இசை தொடர்புடைய இந்த படத்தை உயர்த்தி நிறுத்தி வைத்து விட்டார் இளையராஜா.. கிராமத்து மனிதர்கள் உணர்வையும் கலைஞர்களின் உணர்வையும் அழகாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்..

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் காந்தாரா படம் போல ஒரு காட்சி இருக்கும்.. அதில் எந்த சினிமா தனமும் இல்லாமல் தெருக்கூத்து கலைஞர்களின் பாடலை வைத்திருப்பது கதையின் மீது இயக்குனர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது.. அதற்கு ஒப்புக்கொண்டு இளையராஜா இசை அமைத்த விதமும் வேற லெவல் ரகம்..

படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.. முக்கியமாக ஒப்பனை கலைஞர்கள் இந்த படத்தில் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது..

‘ஜமா’ படத்தை ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது… இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ளது..

இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜமா படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான “பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி” நிறுவனம் வாங்கியுள்ளது..

ஜமா – 4/5.. தெருக்கூத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *