டீன்ஸ் விமர்சனம்.. தொலையும் நண்பர்கள்

திரை விமர்சனம்

ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கும் குடியிருப்பில் சிறுவர்கள் சிறுமிகள் வசிக்கின்றனர்.. 15 வயது நெருங்கிய இவர்கள்.. இன்னும் நம்மை சின்ன பிள்ளை போல் பெற்றோர்கள் நடத்துகிறார்கள்..

நாம் எல்லாம் வளர்ந்து விட்டோம்.. இன்னும் முளைச்சு மூணு இலை விடல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் வளர்ந்துவிட்டோம் என காட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பிலும் படித்தும் வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இதில் இருக்கும் ஒருத்தி தன் பாட்டி இருக்கும் ஊரில் பேய் கிணறு இருக்கிறது என்ற உண்மை கதையே சொல்கிறாள்.. இதனை எடுத்து அந்த பேய்க் கிணறை பார்க்க வேண்டும் என அனைவரும் திட்டம் போட்டு வகுப்பில் இருந்து வெளியேறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் செல்லும் வழியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து தடைபடுகிறது.. எனவே இவர்கள் காட்டு வழியில் நடந்து செல்கின்றனர்.. அப்போது ஒவ்வொரு ஒருவராக காணாமல் போகின்றனர். கிட்டத்தட்ட நான்கு ஐந்து பேர்கள் தொலைந்து விட்ட நிலையில் இவர்கள் வேறு வழியின்றி யாராவது உதவிக்கு வருவார்களா என காத்திருக்கின்றனர்.

ஒவ்வொருவராக தொலைந்ததன் பின்னணி என்ன? அவர்களை யார் கடத்தியது? அவர்கள் எங்கே சென்றார்கள் என்ற சூழ்நிலையில் பள்ளியில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் காவல்துறையும் இவர்களை தேடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது அவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

8 சிறுவர்கள் 5 சிறுமிகள் என 13 சிறுவர் சிறுமியர் இந்த படத்தின் தூண்களாக நிற்கின்றனர்.. முதல் பாதி கலகலப்புக்கு பஞ்சமில்லை.. பெற்றோர்களைப் பற்றி இந்த காலத்து 2K கிட்ஸ் என்ன எல்லாம் நினைக்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.

சில டயலாக்குகள் அளவுக்கு மிஞ்சியதாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பார்ப்பது சுவாரசியமான கற்பனை தான்..

படத்திற்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காகவே யோகி பாபு கேரக்டர் வருகிறது.. கொஞ்சம் கூட படத்தில் ஒட்டவில்லை.. பார்த்திபன் அதை கட்டிங் போட்டு வெட்டி இருக்கலாம்..

இடைவேளைக்குப் பிறகு காட்சிகளை பார்த்திபன் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்கிறார்.. விஞ்ஞானியாக இவர் வருவதும் இவர் செய்யும் ஒவ்வொன்றும் நமக்கு சோதனையாகவே முடிகிறது..

பார்த்திபன் படத்திற்கு முதல்முறையாக இமான் இசையமைத்திருக்கிறார்.. மெலோடி பாடல்கள் அனைத்தும் இதயத்தை வருடுகிறது.. ஆனால் இந்த இளம் சிறுவர்களுக்கு காதல் காட்சி தேவையா? என பார்த்திபன் கொஞ்சமாவது யோசித்து இருக்க வேண்டும்.

படத்தில் 90% காட்சிகள் வெட்டவெளியில் படமாக்கப்பட்டுள்ளது.. எந்தவிதமான லைட்டிங் பயன்படுத்தாமல் காட்சிகளை படமாக்கி இருக்கும் ஒழிப்பதிவாளர் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இரண்டாம் பாதியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் ஏலியன் காட்சிகளும் குழந்தைகளை கவரும் என நம்பலாம்.

எப்போதுமே பார்த்திபன் வித்தியாசமான சிந்தனையில் படத்தை இயக்குபவர்.. இடைவேளைக்கு முன்பும் இடைவேளைக்குப் பின்பும் காட்சிகள் வெவ்வேறு மாதிரியான கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சிந்தனை எல்லோருக்கும் ஒத்து வருமா? அவர்களுக்கு எட்டுமா என்பதை பார்த்திபன் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..

குழந்தைகளை மட்டுமே மனதில் வைத்து பார்த்திபன் இந்த படத்தை இயக்கி இருப்பதால் குழந்தைகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

ஆக டீன்ஸ்.. தொலையும் நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *