நாயகன் சிபி & நாயகி பவ்யா இருவரும் காதலிக்கிறார்கள்… நாயகியோ மிகவும் வசதியானவர்.. எனவே அவர் அந்தஸ்துக்கு உயர அமெரிக்கா செல்ல முற்படுகிறார் நாயகன்… இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார் நாயகி பவ்யா.

அமெரிக்க செல்ல ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் ஜாலியாக காரில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் காரில் முன்பாக வரவே அவர் மீது மோதி அவர் இறந்து விடுகிறார்.

நீ இங்கிருந்தால் உன் மீது கொலை பழி வந்துவிடும்.. உன்னால் அமெரிக்க செல்ல முடியாது.. எனவே நீங்கிருந்து சென்று விடு.. நான் சமாளித்துக் கொள்கிறேன் என நாயகி நாயகனை அனுப்பி விடுகிறார். ஆனால் நாயகனுக்கு குற்ற உணர்ச்சி.. நாயகிக்கு உதவியாக நாயகனின் நண்பனும் ஜெகனும் உதவி செய்கிறார்.

தன் தந்தை விபத்தில் இறந்ததை அறியாத 15 வயது மகன் (இவனுக்கு தாய் இல்லை) தந்தையை இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறார். இவனுக்கு அருகில் வசிக்கும் விபச்சாரி யாஷ்மின் ஆதரவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த சிறுவனின் தந்தை வாங்கிய கடனுக்காக அவனை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார் வில்லன்.

அதன் பிறகு நடந்தது என்ன.? நாயகனுக்கும் இந்த சிறுவனுக்கும் தொடர்பு இருந்ததா? நாயகன் அமெரிக்கா சென்றாரா? தந்தை இல்லாத அந்த சிறுவனின் நிலை என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை.

நாயகன் சிபி.. பெரிய சிரத்தை எதுவும் எடுக்காமல் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். பெண் ரசிகைகளை கவரும் வகையில் ஸ்மார்ட் ஆகவே வந்து செல்கிறார்.. போலீஸ் பார்வை தன் பக்கம் திரும்பவில்லை என்றாலும் ஒரு குற்றம் செய்தவரின் குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக யாஷ்மின் பொன்னப்பா.. எனவே கூடுதல் கவர்ச்சி கொடுத்து இளைஞர்களை சூடு ஏற்றி இருக்கிறார்.. ஆனால் அந்தப் பூக்கடை பகுதிக்கும் இவரது பேச்சும் இவரது தோற்றமும் கொஞ்சம் கூட ஒட்டவில்லை.

நாயகி பவ்யா.. ஜோ படத்தில் இரண்டாம் நாயாக நடித்த இவர் கதையை தாங்கி நிற்கிறார். அழகான கண்களாலும் உதடுகளாலும் வசீகரிக்கிறார்.

கொஞ்சம் ஒன்லைன் காமெடியை ஆங்காக தூவி விட்டு குணச்சித்திர கேரக்டராக உறுமாறி இருக்கிறார் ஜெகன்.

வில்லன் வேடத்தில் வின்சென்ட் நகுல்.. இவர் கயல் படத்தில் நாயகனுடன் இணைந்து நடித்தவர்.. கொஞ்சம் வில்லத்தனமும் ஓவர் பில்டப்பும் கொடுத்து இருக்கிறார்கள்.

கிறிஸ்தவ பாதிரியராக ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக பாலாஜி சக்திவேல் இருவரும் தங்கள் கேரக்டர்க்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்

நாயகனுக்கும் அந்த சிறுவனுக்கு ஒரு தொடர்புமில்லை.. ஆனால் சிறுவனைப் பார்த்து அடுத்த நொடியே அவனுக்கு உதவி செய்கிறார் நாயகன்? அவன் ஆபத்தில் இருப்பதை எப்படி இவர் அறிந்தார் என்பதற்கான காட்சிகள் இல்லை.

சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக மனோஜ் முல்லத்.. சேட்டு கேரக்டரில் நன்றாகவே செட்டாகி இருக்கிறார்.. இவரைச் சுற்றி தான் கதை நகர்கிறது.. கிளைமாக்ஸ் இல் எதிர்பாராத திருப்புமுனை கொடுத்திருக்கிறது.

சிறுவன் ஆதித்யா அசத்தல்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தென்பட்டாலும் அவனது சாந்தமான முகமும் அவனது நடிப்பும் பேசப்படும் வகையில் இருக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்… அதுபோல பின்னணி இசையும் எந்த இரைச்சலும் இல்லாமல் அருமை..

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு படத்துடன் நம்மை ஒன்றை வைக்க உதவி இருக்கிறது..

இயக்குநர் பாலாஜி மாதவன்.. (இவர் இயக்குனர் பி வாசுவின் உறவினர்.) நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

குற்றம் செய்து விட்டாலும் தப்பிக்க நினைக்காமல் நாயகனின் கேரக்டரை வடிவமைத்து இருப்பது இயக்குனரின் நல்ல எண்ணத்தை காட்டுகிறது.. ஆனால் நாயகன் முதலில் என்ன வேலை பார்க்கிறார் என்பது புரியாமல் இருக்கும்போது நாயகனுக்கும் சிறுவனுக்கும் கனெக்சன் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரும் ஒரு வகையில் டாக்டர் என்பதைப் போல காட்டியிருக்கிறார்.

கடன் கொடுத்து விட்டு வசூலிக்கும் இடி மன்னன்.. விபத்து ஏற்படுத்திய மழை மின்னல்.. நாயகன் நாயகிக்கு காதல்.. என அனைத்தையும் கலந்து இந்த இடி மின்னல் காதலை படைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மாதவன்..

எடிட்டிங்கில் ஒரு சில குறைகள் இருப்பதை தவிர்த்து இருந்தால் இந்த படம் பெரிய அளவில் பேசப்படும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/5f6f2dc1-3eb4-4aa6-9bd3-ea9138017564-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/5f6f2dc1-3eb4-4aa6-9bd3-ea9138017564-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்  நாயகன் சிபி & நாயகி பவ்யா இருவரும் காதலிக்கிறார்கள்... நாயகியோ மிகவும் வசதியானவர்.. எனவே அவர் அந்தஸ்துக்கு உயர அமெரிக்கா செல்ல முற்படுகிறார் நாயகன்... இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார் நாயகி பவ்யா. அமெரிக்க செல்ல ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் ஜாலியாக காரில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் காரில் முன்பாக வரவே அவர் மீது மோதி அவர் இறந்து விடுகிறார். நீ...