Dhirav & Ismath Banu.. திரவ் மற்றும் இஸ்மத் பானு இருவரும் கிராமத்தில் வசிக்கும் தம்பதியர்.. பானுவின் மாமியார் ரமா.

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆனபோதும் குழந்தைகள் இல்லை இதனால் மாமியார் மருமகளை அடிக்கடி மலடி மலடி என்ற திட்டி வருகிறார்.

என்னதான் அடிக்கடி உடலுறவு கொண்டாலும் குழந்தை இல்லாமல் தவிக்கிறார் நாயகி.. ஒரு கட்டத்தில் குழந்தை பெற மதுரையில் உள்ள கருத்தரிப்பு மையத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

அங்கு சென்ற பின்னர் தான் மனைவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை கணவனுக்கு மட்டும்தான் பிரச்சனை தெரிய வருகிறது.

ஆனால் அதை கணவனிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நாயகி.. மேலும் ஒரு கட்டத்தில் கணவனுக்கே தெரியாமல் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார் நாயகி.

அதன் பின்னர் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பதுதான் கதை.

நாயகன் திரவ் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எடிட்டர்.. கதைக்கு ஏற்ப தன் கேரக்டரை அழகாக உடல் மொழியில் கொடுத்திருக்கிறார். வீரமான ஆம்பள என கிராமத்தில் கெத்து காட்டினாலும் குழந்தை இல்லாததால் தனக்கு பிரச்சனை இருக்குமோ என இவர் ஏங்கித் தவிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அதுவும் ஒரு கட்டத்தில் மனைவி வாந்தி எடுத்தபின் மீசையை முறுக்கிக்கொண்டு சிரித்துக் கொண்டே அழும் அந்த காட்சி நிச்சயம் அப்பளாஸ் அள்ளும்.

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறார் இஸ்மத் பானு. இவர் அசுரன் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த வெப்பம் குளிர் மழை நாயகி பானுவுக்கு பெரியளவில் பெயரை பெற்று தரும்.

கணவனிடம் வெட்கப்படும்போதும்.. மலடி என்ன திட்டு வாங்கியபின் கலங்கும்போதும்.. கணவனுக்கு பிரச்சனை என சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் ஒரு மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார்.

யதார்த்த கிராமத்து மனிதராகவே தன் கேரக்டரை உயர்த்தி நிற்க வைத்து விட்டார் எம் எஸ் பாஸ்கர்.. தன் அனுபவ நடிப்பால் பொட்டம்மா கேரக்டரை ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் ரமா.. மகன் பேரன் மீது பாசம் காட்டுவதும் மருமகள் மீது எரிச்சல் அடைவதும் என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார்.

சிறுவனாக நடித்துள்ள மாஸ்டர் கார்த்திகேயனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறான்.

நாயகன் திரவ் இந்த படத்தின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.. பாடல் வரிகளை உணர்வுபூர்வமாக எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு.. அதற்கு ஏற்ப அழகான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சங்கர்..

பிரித்விராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கிராமத்தில் காட்டப்படும் ஏழை வீடுகளை எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்..

பாஸ்கல் வேதமுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.. கிராமத்தில் குழந்தை இல்லாமல் வாழும் தம்பதியினர் எப்படி எல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.? அவர்களை அந்த கிராமத்தினர் எப்படி எல்லாம் ஏளனம் செய்வார்கள் என்பதை தத்ரூபமாக காட்டி இருக்கிறார்.

கணவனின் கௌரவத்தை காக்க ஒரு போராடிய மனைவி அதன் பின்னர் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்ன என்பதை காட்டியிருக்கிறார் அதே சமயம் உடலுறவு என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல மனதளவில் உடலுறவு கொள்ள வேண்டும்.

இரு உயிர்கள் உணர்வுபூர்வமான உடலுறவில் ஈடுபட்டால் மட்டும் தான் மற்றொரு உயிர் பிறக்கும் என்பதையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/61b7da5c-96f3-4aa7-81e7-707774be58cf-1024x540.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/61b7da5c-96f3-4aa7-81e7-707774be58cf-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்Dhirav & Ismath Banu.. திரவ் மற்றும் இஸ்மத் பானு இருவரும் கிராமத்தில் வசிக்கும் தம்பதியர்.. பானுவின் மாமியார் ரமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆனபோதும் குழந்தைகள் இல்லை இதனால் மாமியார் மருமகளை அடிக்கடி மலடி மலடி என்ற திட்டி வருகிறார். என்னதான் அடிக்கடி உடலுறவு கொண்டாலும் குழந்தை இல்லாமல் தவிக்கிறார் நாயகி.. ஒரு கட்டத்தில் குழந்தை பெற மதுரையில் உள்ள கருத்தரிப்பு மையத்திற்கு இருவரும்...