வழக்கமான பேய் பட ஃபார்முலாவில் வந்திருக்கும் படம் இந்த கார்டியன்..

சிறு வயது முதலே அதிர்ஷ்டம் இல்லாதவர் ஹன்சிகா.. இவர் எதை ஆசைப்பட்டாலும் இவருக்கு கிடைப்பதில்லை.. அப்படியே கிடைத்தாலும் அது இவரிடம் நிலைப்பதில்லை.. இப்படியாக வாழ்க்கை வெறுத்து வளர்ந்து வருகிறார் ஹன்சிகா.

இன்டீரியர் டிசைனிங் முடித்த இவர் ஒரு கட்டத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக இவரின் ரத்தம் ஒரு கல்லின் மீது பட்டு விடுகிறது. அந்தக் கல்லில் உள்ளே இருக்கும் ஒரு ஆன்மா இவரிடம் தொற்றிக் கொள்கிறது.

இதனையடுத்து ஹன்சிகா நினைத்ததெல்லாம் நடக்கிறது.. வாழ்க்கை மாறிவிடுகிறது.. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்சிகா.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர் சாதாரணமாக நினைத்தால் கூட ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது. காரணம் இவருக்குள் இருக்கும் ஆவி தான் அந்த கொலைகளை செய்கிறது.

இதனை அறியும் ஹன்சிகா என்ன செய்தார்? உள்ளே இருக்கும் ஆவி நோக்கம் என்ன? அவர்களை பழிவாங்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒட்டுமொத்த கதையை தாங்கி நிற்கிறார் ஹன்சிகா.. முதல் பாதியில் துறுதுறு பெண்ணாக நடித்த இவர் இரண்டாம் பாதியில் பேயாக கொஞ்சம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் செய்து நம்மை சோதிக்கிறார்.

ஒரு நாயகன் இருக்க வேணுமே.. எனவே பிரதீப் ராயன் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் வந்து போகிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை சில காமெடி செய்து இருக்கின்றனர்.

வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்.. இவர்கள் ஆடிட்டர் தியாவை கொலை செய்ய போதுமான காரணங்கள் இல்லை.

தியா (அறிமுகம்) ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்).. இருவருக்கும் முதல் படம் என்றாலும் அருமையான நம்மை அழ வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. பேய் படத்திற்கு உரிய மிரட்டல் இசையை கொடுத்து கொஞ்சம் இரைச்சலையும் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர்.. மெலோடி பாடல் ரசிக்க வைக்கிறது.

இந்த படத்திற்கு K.A சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவாளர் பணி பாராட்டுக்குரியது.

‘வாலு & ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

வழக்கமான பேய் படத்தை கொடுத்திருக்கின்றனர் இயக்குனர்கள்.. பேய் பட ரசிகர்களை இந்த கார்டியன் கவரும் என நம்பலாம்..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/473d2e38-8643-4a53-b3b5-da7882199bef-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/473d2e38-8643-4a53-b3b5-da7882199bef-150x150.jpgrcinemaசெய்திகள்திரை விமர்சனம்  வழக்கமான பேய் பட ஃபார்முலாவில் வந்திருக்கும் படம் இந்த கார்டியன்.. சிறு வயது முதலே அதிர்ஷ்டம் இல்லாதவர் ஹன்சிகா.. இவர் எதை ஆசைப்பட்டாலும் இவருக்கு கிடைப்பதில்லை.. அப்படியே கிடைத்தாலும் அது இவரிடம் நிலைப்பதில்லை.. இப்படியாக வாழ்க்கை வெறுத்து வளர்ந்து வருகிறார் ஹன்சிகா. இன்டீரியர் டிசைனிங் முடித்த இவர் ஒரு கட்டத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக இவரின் ரத்தம் ஒரு கல்லின் மீது பட்டு விடுகிறது. அந்தக் கல்லில் உள்ளே...