பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்)., யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு)

இவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.. இதில் அர்ஜுன் தாஸ் சீனியர்.. காளிதாஸ் ஜெயராம் ஜூனியர்..

இவர்கள் இருவருக்கும் சிறு வயது முதலே பகை.. எனவே அந்த பகை கல்லூரியிலும் தொடர்கிறது..

 

இவர்களின் தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு)..

ஒரு கட்டத்தில் இவர்களின் மோதல் அடிதடி எப்படி இந்த கல்லூரியை ‘போர்’க்களமாக்குகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் தாஸ் மிரட்டலான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. அவரது குரல் அவரது பலம் என்றாலும் கல்லூரி மாணவர் பாத்திரத்தில் கொஞ்சம் பலவீனமாகவே தெரிகிறது.. காரணம் ஓவர் மெச்சூரிட்டி..

கல்லூரியின் காதல் மன்னனாக காளிதாஸ்.. எந்தப் பெண் பார்த்தாலும் இவர் மீது காதல் கொள்ளும் கேரக்டராக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சஞ்சனா நடராஜன், டி.ஜெ. பானு, நித்யஸ்ரீ ஆகியோரின் பாத்திரங்கள் அருமை.. கல்லூரி நட்புக்கும் கதைக்கும் சப்போர்ட்டிவ் கேரக்டர்களாக அமைந்திருக்கின்றனர். அம்ருதா சீனிவாசனுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

வெப் தொடருக்கான கதையை ஒரே திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்..

படத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒன்றுக்கு மூன்று பேரை வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். அதனால என்னவோ படத்தில் எதிலும் முழுமை இல்லை.. முக்கியமாக ஒளிப்பதிவு இசை கலை என ஒவ்வொரு துறைக்கும் இரண்டு மூன்று நபர்கள்..

ஒளிப்பதிவாளர்கள்.. ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசாவை.

பின்னணி இசை -ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்,

கலை இயக்குநர்கள் : லால்குடி இளையராஜா, மானசி சாவரே.

எடிட்டர் – பிரியங்க் பிரேம்குமார்.. இவரால்தான் படத்தில் ஏகப்பட்ட பொறுமையை நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது.. தேவையற்ற காட்சிகளை வெட்டியிருந்திருந்தால் நமக்கு நிம்மதியாவது கிடைத்திருக்கும்..

இயக்குனர் பிஜோய் நம்பியார்..

கல்லூரிகளில் போதை மருந்து பழக்கம் தற்போது நடைமுறையில் காணப்பட்டாலும் மருத்துவம் சார்ந்த ஒரு கல்லூரியில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட போதை மருந்துகளின் காட்சிகள் தேவைதானா.?

அர்ஜுன் தாசுக்கு மன அழுத்த பிரச்சனை.. அழகாக காணப்படும் ஆண் மகன் காளிதாசுக்கு பாலியல் தொல்லை.. விடுதிகளில் தேவையற்ற விஷயங்கள்.. ஒரே ஹாஸ்டலில் பாய்ஸ் & கேர்ள்ஸ், தோழியின் தன் பாலின ஈர்ப்பு  எனத் தேவையற்ற காட்சிகளை வைத்து நமக்கு கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி இருக்கிறார் இயக்குனர்..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-04-at-18.10.38-1-1024x682.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-04-at-18.10.38-1-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்)., யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு) இவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.. இதில் அர்ஜுன் தாஸ் சீனியர்.. காளிதாஸ் ஜெயராம் ஜூனியர்.. இவர்கள் இருவருக்கும் சிறு வயது முதலே பகை.. எனவே அந்த பகை கல்லூரியிலும் தொடர்கிறது..   இவர்களின் தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு).. ஒரு கட்டத்தில் இவர்களின் மோதல் அடிதடி எப்படி இந்த கல்லூரியை 'போர்'க்களமாக்குகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. அர்ஜுன் தாஸ்...