2003 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது சதீஷ். இவர் இரட்டை குழந்தை… 20 ஆண்டுகளுக்கு பின்னர் கதை தொடங்குகிறது.

சதீஷ் ஒரு மேஜிக் கலைஞர்.. இவருக்கு பெரிய தொகை தேவைப்படுவதால் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்.

இதனால் சென்னை ஏர்போர்ட்டில் கைப்பற்றப்பட்ட வைர நகைகளை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார்.

இதற்காக மூன்று  கொள்ளை கும்பல்களுடன் திட்டம் போடுகிறார்.. (மூன்று கேங் லீடர்ஸ் மதுசூதன் ஆனந்தராஜ் சுப்ரமணிய சிவா) இவர் யார் என்று தெரியாமலே அந்த கும்பலும் இவரின் திட்டத்திற்கு ஒத்துக் கொள்கின்றனர்.

(இதில் சுப்ரமணிய சிவாவின் அடியாளாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி.)

இறுதியில் அந்த வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? எப்படி கொள்ளை அடித்தனர்? ஒரு நாயகன் கொள்ளை அடிக்க திட்டமிட என்ன காரணம்? அவரின் நோக்கம் என்ன? என்பதுதான் மீதிக்கதை..

Sathish
Simran Gupta
Anandraj
Madhusudhan
Subramaniam Siva
John Vijay
Pavel Navageethan
Japan Kumar

பல படங்களில் காமெடியனாக ஓரிரு படங்களில் நாயகனாக நடித்த சதீஷ் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சீரியஸ் ரோலில் நடித்திருக்கிறார் அதற்காகவே அவரை பாராட்டலாம்.. தனக்கு மட்டுமில்லாமல் தன்னை சேர்ந்த கும்பல்களுக்கும் நிறைய ஸ்பேஸ் கொடுத்து இருப்பது சிறப்பு.

நாயகி சிம்ரன் குப்தா.. கொஞ்ச நேரமே என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஒரு தலை காதலால் தவிக்கும் சதீஷ்.. தான் விரும்பிய பெண்ணுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த கால காதலர்களுக்கு சரியான பாடம்.

ஆனந்தராஜ் மதுசூதன் மற்றும் சுப்ரமணிய சிவா இவர்களுடன் வேலை செய்யும் அடியாள்கள் அனைவரும் கலகலப்பு உதவி இருக்கின்றனர். மதுசூதனின் உதவியாளர் சாம்ஸ் காமெடியை ஆங்காங்கே சிதற விட்டிருக்கின்றனர்.

அதுபோல சுப்பிரமணிய சிவாவின் அடியாளாக வரும் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி சீரியஸ் முகத்தை வைத்துக்கொண்டு DEFENCE ஆபீஸர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகள் ரசிக்கும் ரகம்.

இந்த கும்பல் தலைவர்களில் ஆனந்தராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஜான்விஜய் & ஜப்பான் குமார் ஆகியோரும் நம்மை கவனிக்க வைக்கின்றனர்

Banner : White Carpet Films
Produced by : K.Vijay Pandi
Written & Directed by : Venki
Music : VBR
DOP : Yuva Karthick
Editor : Arul Elango Siddharth
Art : G.Durairaj
Stunts : Stunner Sam
Costume Designer : Kiruthika Sekhar
Production Controller: S.N.Asraf
Production Executive: Hakkim Sulaiman
Stills : S.P.Suresh
PRO : Sathish (AIM)
Motion Poster: Aathi
Publicity Designer : Thandora
Co-Producer : R. Murali Krishnan
Associate Directors: A.Abilash, Aneesh Rathenam, Maris
Assistant Directors: G.Hariharan, Rajeshwaran.J, V.Prabakaran, V.K Senthil Rajan, Sriram GV, Vaseekaran Dhanavel, Zubedh Syed

வி பி ஆர் என்பவர் இசையமைத்துள்ளார்.. இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப பணி செய்து இருக்கிறார்.. இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக சதீஷ் ஆட்டம் போடும் பாடலும் அவரின் ஆட்டமும் அடடா நம்ம சதீஷ்? என்று வியக்க வைக்கிறார்.

யுவ கார்த்திக் என்பவர் ஒளிப்பதிவு செய்ய அருள் இளங்கோ சித்தார்த் என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.. இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு எடிட்டிங் என்பது படத்தின் வேகத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகும்.. அதை சிறப்பாகவே கொடுத்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படம் என்றாலும் அழகாக திரைக்கதை அமைத்து அதற்கு தெரிந்த நடிகர் நடிகைகளை எடுத்து ஒரு நல்ல சுவாரசியமான படத்தை கொடுத்திருக்கிறார்.

ஹீரோ சதீஷ் நடந்து வரும்போது பின்னணி இசை கொடுத்து பின்னர் கட் செய்து அவரை நடக்க விட்டு வரும் காட்சிகள் ரசிக்க தக்கவை.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சீரியஸ் என்றாலும் அதிலும் கொஞ்சம் நகைச்சுவை கலந்து காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/99818033-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/99818033-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்2003 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது சதீஷ். இவர் இரட்டை குழந்தை... 20 ஆண்டுகளுக்கு பின்னர் கதை தொடங்குகிறது. சதீஷ் ஒரு மேஜிக் கலைஞர்.. இவருக்கு பெரிய தொகை தேவைப்படுவதால் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் கைப்பற்றப்பட்ட வைர நகைகளை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார். இதற்காக மூன்று  கொள்ளை கும்பல்களுடன் திட்டம் போடுகிறார்.. (மூன்று கேங் லீடர்ஸ் மதுசூதன் ஆனந்தராஜ் சுப்ரமணிய சிவா) இவர் யார் என்று தெரியாமலே அந்த கும்பலும்...