பாம்பாட்டம் பட விமர்சனம்
சுதந்திரப் போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர் வடிவுடையான்.. அரசி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்க வரும் ஜோசியர் உங்களுக்கு நாகத்தால் ஆபத்து இருக்கிறது.. அது உங்களை கொன்று விடும் என்கிறார்.
எனவே அந்த ஊரில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனாலும் ஒரு பாம்பு வந்து அவரை கொன்று விடுகிறது. இதனை எடுத்து இளவரசிக்கும் பாம்பினால் உயிருக்கு ஆபத்து என்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பாம்புகள் இல்லாத தேசமான நியூசிலாந்துக்கு தன் மகளை அழைத்து சென்று விடுகிறார் அரசர். அங்கு ஒரு பெரிய அரண்மனையில் மகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். ராணியின் ஆவி அங்கு சுற்றிக் கொண்டிருக்கிறது என் ஊர் மக்கள் நம்புகின்றனர்..
சில ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஜீவன் வருகிறார். அவர் வந்து இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார்.. அதன் பின்னர் பல உண்மைகள் அவருக்கு கிடைக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜீவன் (மாணிக்க வேல் )- அப்பா ) மகன் ஜீவன் (சரவணன் ), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் (ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மல்லிகா செராவத் இறந்து விடுகிறார். அவரது தோற்றம் அரசி வேடத்திற்கு பொருத்தமாக இல்லை.
அப்பா மகன் இரு வேடங்களில் ஜீவன்.. போலீஸ் வேடத்தில் கம்பீரம.. மகன் வேடத்தில் கனிவு என வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
இளவரசியாக ரித்திகா சென் இவரது கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது.. இளவரசிக்கு ஏற்ற முகத்தோற்றமும் இருப்பதால் ரசிக்க முடிகிறது..
இவர்களுடன் சாய்பிரியா, யாஷிகா ஆனந்த் பருத்திவீரன் சரவணன் ச சுமன் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் உண்டு. ஆனால் இந்த கதாபாத்திரங்கள் கதைக்கு போதுமானதாக இல்லை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான்
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன்,
இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.
படத்தில் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன பாம்பு காட்சி பயப்படும்படியாக இல்லை.. ஆனால் குழந்தைகளை நிச்சயம் பயமுறுத்தும்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கிறது..
கிராபிக்ஸ்க்கு கூடுதல் பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும் இந்த பாம்பாட்டம்.
பெரும் நட்சத்திரங்களை வைத்து வடிவுடையான் இந்த படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார். முதல் பாதி கதையில் ஒட்டவில்லை.. ஆனால் இரண்டாம் பாதியில் கதை ஓட்டத்திற்கான காரணத்தையும் அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.