திரை விமர்சனம்

பர்த் மார்க் பட விமர்சனம்..

தன் மனைவி மிர்னாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வேண்டும் பிரசவம் பார்க்க வேண்டும் என விரும்புகிறார் ராணுவ வீரர் சபீர். இதற்காக கேரளா அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அங்கு ஒரு வேலைக்காரன் மற்றும் இரண்டு மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் சுகப்பிரசவத்திற்காக சில பயிற்சிகளை செய்ய சொல்கின்றனர். மேலும் அவர்கள் சொல்லும் பயிற்சிகள் இவருக்கு எளிதாக இல்லை என்பதால் பிரசவத்திற்கு பயப்படுகிறார். அங்கு ஆம்புலன்ஸ் ஆபரேஷன் தியேட்டர் என எந்த வசதியும் இல்லாததால் ஏதேனும் பிரசவத்திற்கு பிரச்சனை வந்து விடுமா என பயப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளும் சபீர் இந்த குழந்தை உன்னுடைய குழந்தை.. எனக்கான குழந்தை இல்ல.. இந்த குழந்தை வேண்டாம் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது.? குழந்தை சுகப்பிரசவம் ஆனதா.? முறையாக மருத்துவர்கள் செய்ய சொன்னதை நாயகி செய்தாரா என்பது படத்தின் மீதி கதை.

சபீர் மற்றும் மிர்ணா இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.. மிர்ணா ஒரு கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வேதனைகளை தன் முகத்தில் & நடிப்பில் கொடுத்திருக்கிறார்..

ஒரு ஆர்மி இளைஞராகவும் அதே சமயம் சந்தேகப்படும் கணவனாகவும் இரு மாறுபட்ட உணர்வுகளை கொடுத்திருக்கிறார் சபீர். தாடி வைத்த முகம் சேவிங் செய்த முகம் என 2 தோற்றங்களில் ஸ்மார்ட்..

இவர்களுடன் நடித்த செபாஸ்டின் கேரக்டர் இந்திரஜீத் என்பவர் வாய் பேச முடியாதவராக அருமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை மிரட்டல்.. ஒளிப்பதிவு அடர்ந்த காடு.. அதன் உள்ளே வெள்ளை அடிக்கப்பட்ட அரங்கம் என சிறப்பாக அமைந்திருக்கிறது..

விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.. மாறுபட்ட சிந்தனை உடன் படத்தை கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தை இரண்டு மணி நேரம் ஆக கொண்டு செய்திருப்பது போர் அடிக்கிறது.

இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் நேசிக்கும் ஒரு ராணுவ வீரனை இப்படி ஒரு காட்டிருக்கக் கூடாது.. அதே சமயம் கணவனுக்கு சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக ஆயுர்வேத சிகிச்சையை கொடுக்க நினைக்கும் கணவன் கேரக்டரை பாராட்டலாம்..

முக்கியமாக பர்த் மார்க் என்ற பெயரை தமிழில் வைத்திருக்கலாம்..