திரை விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா பட விமர்சனம்

ரோஹித் மற்றும் யுவஸ்ரீ இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகன் நாயகி இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் திடீரென அமெரிக்காவுக்கு நாயகியை அழைத்து செல்கிறார் அவரது அப்பா. இதனால் காதலர்கள் இடையே பிரிவு வருகிறது..

வளர்ந்து பெரியவனாகிறார் பிரஜன். அத்தை மகள் மனிஷா யாதவுக்கு கொள்ளை காதல். எனவே திருமணம் செய்து கொள்ள ஒற்றைக்காலில் நிற்கிறார். ஆனால் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனவே இவளை மணக்க முடியாது என்கிறார் பிரஜன்.

இதனால் மனம் உடையும் மனிஷா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.. நாயகனுக்கு நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.. உன்னை அவள் மறந்திருப்பாள். எனவே நீ இவளை திருமணம் செய்து கொள் என மதுமிதா ரெடின் உள்ளிட்ட நண்பர்கள் அட்வைஸ் செய்கின்றனர்.

அமெரிக்காவுக்கு சென்ற தன் காதலி (யுவ) திருமணம் செய்து கொள்ளாமல் எனக்காக காத்திருந்தால் என்ன செய்வது? ஒருவேளை அவள் அப்படி வந்தால் நான் செத்து விடுவேன் என்கிறார் நாயகன்.

அது எல்லாம் நடக்காது.. அவள் நிச்சயமாக திருமணம் செய்து இருப்பாள் என நண்பர்கள் வற்புறுத்தி மனிஷாவை திருமணம் செய்து கொள்ள வைக்கின்றனர்.

எனவே வேறு வழி இல்லாமல் தன் முறைப்பெண் மனிஷாவை திருமணம் செய்து கொள்கிறார் பிரஜின்.. ஆனாலும் காதலின் நினைவாகவே இருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுகிறது.

ஒரு கட்டத்தில் பிரஜனின் காதலி அமெரிக்காவிலிருந்து காதலனை தேடி சென்னைக்கு திரும்பி வருகிறார். அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் நண்பர்கள் என்ன செய்தனர் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

 

Starring – PRAJAN, MANISHA YADAV, SINAMIKAA, YUVALAKSHMI, ROHIT, REDDIN KINGSLEY, MANOBALA
MADHUMITHA
RV UDHAYAKUMAR
PL THENAPPAN MUTHURAMAN, YASAR ABI NATCHATHIRA

பிரஜன் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.. காதலியுடன் வாழ முடியாமல் மனைவியுடன் வாழ பிடிக்காமல் படும் வேதனைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரஜன் ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அவர் கண் கலங்கும் காட்சியில் நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

நாயகியாக சினாமிகா.. காதலனுக்காக அமெரிக்காவிலிருந்து வந்து காதலனை தேடி ஏங்கும் காட்சிகளில் சிறப்பு ஆனால் நாயகனை விட இவரது முகத்தில் முதிர்ச்சி தென்படுகிறது.

எவருமே எதிர்பாராத ஒரு கேரக்டரில் ஸ்ரீ பிரியங்கா நடித்திருக்கிறார். அந்த கேரக்டரை சொன்னால் சுவாரசியம் குறைந்து விடும்..

பள்ளிக் காதலர்களாக ரோஹித் மற்றும் யுவஸ்ரீ.. இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது… இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இரண்டு டூயட் பாடல்களும் நிச்சயம் இளையராஜாவின் பெயரை சொல்லும்.

பிரஜனின் நண்பனாக ரெடின் கிங்சிலீ நடித்திருக்கிறார்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடியில் கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார். தோழியாக ஜாங்கிரி மதுமிதா அவரது கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

யுவஸ்ரீ பள்ளி தோழியாக அபி நட்சத்திரா.. கொடுக்கப்பட்ட பள்ளி மாணவி கேரக்டரில் நம்மை கவர்கிறார்..

 

Written & Directed by: AADHIRAAJAN

Music : ILAIYARAAJA

Producer : ROYAL BABU

Banner : LEKHA THEATRES

Cinematographer : RAJA BHATTACHARJEE

Editor : ASHISH

Art director: Munikrishna

STUNT MASTER: PRADEEP DINESH

LYRICS: ILAIYARAAJA, PAZHANI BHARATHI, SNEKAN

SINGERS: Yuvan, KARTHIK ANANYA BHAT
SIREESHA BHAGAVATHULLA
HARIPRIYA

CHOREOGRAPHY: DINESH , DHEENA

இளையராஜாவின் இசையில் ஓரிரு பாடல்கள் மனதை தொட்டாலும் இடைவேளைக்கு முன்பு வரும் பாடல் போர் அடிக்கிறது.. மனிஷாவின் குத்து ஆட்டத்திற்காக அந்த பாடலை ரசிக்கலாம்.

ராஜா பட்டாச்சாரியார் ஒளிப்பதிவு செய்ய ஆஷிஷ் என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்… ஒளிப்பதிவில் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..

எடிட்டர் தான் கொஞ்சம் கத்தரி போட்டு இருக்கலாம்.. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் நீண்டதாக தெரிகிறது. ஆனால் பள்ளி காதல் இந்த படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது..

சிலந்தி & அருவா சண்டை படங்களை இயக்கிய ஆதிராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. முதல் காதல் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாது.. அது என்றென்றும் மனதில் நீங்கா இடம் பெறும் என்பதை வலியுறுத்திருக்கிறார்..

செல்போன் இருந்தாலும் இல்லையென்றாலும் காதல் நிற்கும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.. ஆனால் இந்த காதல் வலியெல்லாம் இந்த 2K கிட்ஸ்க்கு தெரியாது என்பதுதான் வருத்தமே..

ஆக நினைவெல்லாம் நீயடா.. பள்ளி காதல் பாடம்