ஒரு குற்ற வழக்கிற்காக சிறைச்சாலை செல்லும் ஜெயம் ரவி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளைப் பார்க்க 15 நாட்கள் பரோலில் வருகிறார்.. இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு.

அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கவே போலீஸ் அதிகாரி கீர்த்தி சுரேஷ்.. எந்த ஆதாரமும் இல்லாமல் தவிக்கையில் இவரை கண்டிக்கிறார் உயர் அதிகாரி சமுத்திரக்கனி.

அதன் பிறகு என்ன நடந்தது? கொலைக்கான காரணம் என்ன? ஜெயம் ரவி மீது சந்தேகம் கொள்ள என்ன காரணம்? கீர்த்தி சுரேஷ் கண்டுபிடித்தாரா? உண்மையான கொலையாளி யார்? தன் தந்தையை 14 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் மகள் பாசம் வைத்தாரா? என்ற கேள்விகளுக்கு சைரன் பதில் அளிக்கிறது.

 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி.. ஒரு அனுபவப்பட்ட கைதியாக பக்குவப்பட்ட அப்பாவாக திலகன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்.

ஆம்புலன்ஸ் டிரைவர்.. பரோல் கைதி என இரண்டு தோற்றங்களில் வந்து கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

கம்பீரமான கீர்த்தி சுரேஷ்.. நந்தினி என்ற கேரக்டரை திறம்பட செய்திருக்கிறார்.. சில காட்சிகளில் நடிகர் விஜய்யின் ஸ்டைல் எட்டிப் பார்க்கிறது.. முக்கியமாக தான் அமர்ந்திருந்த சேரை கீர்த்தி எட்டி உதைக்கும் காட்சி விஜய் ஸ்டைல்தான்..

இவர்களுடன் போலீஸ் அதிகாரிகளாக யோகிபாபு மற்றும் அருவி மதன்.. இருவரும் எந்தவித குறையும் இன்றி அழகாக கதையை நகர்த்தி இருக்கின்றனர்.

முக்கியமாக யோகிபாபு காமெடி சரவெடி காமெடி.. எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடியில் அசத்தியிருக்கிறார்.

அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி மற்றும் ஜெயம் ரவியின் மகள் என ஒவ்வொரும் தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகின்றனர்.

சமுத்திரக்கனி கேரக்டர் எதிர்பாராத ட்விஸ்ட்.. அவரது வில்லத்தனம் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கிறது.

மொத்தம் பத்து பதினைந்து கேரக்டர்கள் என வந்தாலும் ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் என இரண்டு நட்சத்திரங்கள் இருந்தும் இருவருக்கும் ஒரு டூயட் ரொமான்ஸ் இல்லாமல் திரைக்கதை அமைத்திருப்பதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

இரண்டாம் நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு சிறிய வேடம் என்றாலும் நம்மை அணுவாக ரசிக்க வைத்திருக்கிறார்..

 

பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ்…
பின்னணி இசை – சாம் சி எஸ்

இருவரும் தங்கள் பங்களிப்பில் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் மெலோடி பாடல்களில் ஜிவி பிரகாஷ் அசத்தியிருக்கிறார். பின்னணி இசையில் சாம் வெளுத்து கட்டி இருக்கிறார். படத்தின் வேகத்தை இவர்கள் இசை அதிகரிக்க செய்திருக்கிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை. காஞ்சிபுரத்தின் அழகு.. சிறை கைதிகளின் வாழ்க்கை.. முக்கியமாக ஆம்புலன்ஸ் சேசிங் ஃபைட் சீன் தமிழ் சினிமாவுக்கு புதிது..

நம் காதுகளில் அதிக சத்தம் கேட்டால் அந்த சப்தம் கூட நம்மை செவிடாக்கி விடும்.. ஒலி சப்தத்தால் ஒரு கொலையைக் கூட நிகழ்த்த முடியும் என காட்சிப்படுத்தி இருப்பது மிரட்டல் ரகம்.

ரூபனின் படத்தொகுப்பு வேற லெவல் ரகம் முதல் பாதி வேகம் என்றால் இரண்டாம் பாதி அதிவேகம்..

அந்தோணி பாக்கியராஜ் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. அவரே முதல் படம் என்று சொன்னாலும் நம்மால் நம்ப முடியவில்லை.. படத்தின் வசனங்கள் சூப்பர் சூப்பர் என்று கைத்தட்டி ரசித்து சொல்லலாம்..

ஒருவன் ஜாதி இல்லை என்று சொன்னால் நீ எந்த ஜாதி? என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.. எத்தனையோ நிரபராதிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு..

ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான ஆக்சன் எமோஷன் திரில்லர் என அனைத்தையும் கலந்து கொடுத்து இந்த சைரனை ஒலிக்கச் செய்திருக்கிறார் அந்தோணி பாக்கியராஜ்.

ஒரு சிறந்த படத்திற்கு ஒரு இயக்குனருக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ஒரு தயாரிப்பாளராக உயர்ந்து இருக்கிறார் சுஜாதா விஜயகுமார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/maxresdefault-13-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/maxresdefault-13-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஒரு குற்ற வழக்கிற்காக சிறைச்சாலை செல்லும் ஜெயம் ரவி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளைப் பார்க்க 15 நாட்கள் பரோலில் வருகிறார்.. இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு. அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கவே போலீஸ் அதிகாரி கீர்த்தி சுரேஷ்.. எந்த ஆதாரமும் இல்லாமல் தவிக்கையில் இவரை கண்டிக்கிறார் உயர் அதிகாரி சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? கொலைக்கான காரணம்...