லவ்வர் விமர்சனம்

திரை விமர்சனம்

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன், கௌரிப்ரியா, மதன், ராஜா, கலா, சுகன், சுகில், ரம்யா, ஐஷு, விஷ்வா, பருத்திவீரன் சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

நாயகன் மணிகண்டன் நாயகி கௌரிப்ரியா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.. படிப்பு முடிவதற்குள் கல்லூரியில் நெருக்கமாகி வாழ்க்கையில் நெருக்கமாகி விடுகின்றனர்..

இவர்களின் காதல் ஆறு வயதை கடந்து சென்று கொண்டிருக்கையில் கௌரி ஒரு ஐடி கம்பெனியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்.. ஆனால் மணிகண்டன் பிசினஸ் செய்து ரூபாய் 15 லட்சத்தை இழக்கிறார்.

பின்னர் மீண்டும் வேறு பிசினஸ் செய்ய தன் நண்பர்கள் உதவியை நாடுகின்றார்.. இந்த விரக்தியில் அடிக்கடி மது அருந்தி காதலியுடன் பிரச்சனை செய்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படவே சின்ன சின்ன பொய்களை சொல்லி தப்பிக்க பார்க்கின்றனர்.

இவர்களின் காதல் என்ன ஆனது? காதலர்கள் திருமண பந்தத்தில் இணைந்தர்களா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஜெய் பீம் & குட் நைட் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்த மணிகண்டன் இதிலும் தன் நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார்.. ஒரு யதார்த்த இளைஞனாக தன் உணர்வை வெளிப்படுத்தி அருண் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.. தன் காதலிக்கு ஆண் நண்பர்களுடன் நெருக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் பார்வையில் கொஞ்சம் ரசிக்கவும் வெறுப்பும் ஏற்படுத்துகிறார்..

படத்தை முற்றிலும் தாங்கி தன் திவ்யா கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் கௌரி.. மனம் உடைந்து அழுகும் காட்சிகளில் நம்மையும் அழ வைக்கிறார்.

இவர்களுடன் மணிகண்டன் பெற்றோர்.. கௌரியின் தோழிகள், நண்பர்கள் என அனைவருமே தங்கள் கேரக்டர்களை பலிச்சிடுகின்றனர்.. முக்கியமாக மதன் கேரக்டரில் வருபவர் ரசிகைகளின் மனதை கவர்வார்.

ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.. பாடல்கள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றனர்.. விலகாதே ஒதுங்காதே என்ற பாடல் நிச்சயம் காதலர்களின் காலர் டியூனாக மாறும்..

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.. காதல் காட்சிகளுக்கு ரம்மியும் சேர்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. காதலர்கள் கூடும் இடங்கள் நண்பர்கள் சுற்றுலா செல்லும் இடங்கள் என அனைத்தையும் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்..

இடைவேளைக்கு முன்பு இருந்த விறுவிறுப்பு பிறகு கொஞ்சம் குறைகிறது. நிறைய பாடல்களை இணைத்தது போல இருப்பதால் கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம்..

பிரபுராம் வியாஸ் நிறைய குறும்படங்களை இயக்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். படத்திலிருந்து தன் சிறப்பு இயக்க முத்திரையை வைத்திருக்கிறார்..

வாழ்க்கையில் காதல் என்பது ஒரு பகுதி அதில் சில வெற்றியும் காண்பார்கள் தோல்வியும் அடைவார்கள்.. காதல் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கும் நாமும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற எதார்த்தமான முடிவையும் கொடுத்திருக்கிறார்.

தன் காதலனை காதலியை காயப்படுத்தக் கூடாது என்பதற்காக சின்ன சின்ன பொய்களை சொல்லி பின்ன அதுவே பெருங்காயமாக மாறிவிடும் என்ற காட்சிகளையும் வைத்திருக்கிறார்.

முக்கியமாக காதலர்களை கவரும் வகையில் நிறைய வசனங்களை வைத்து கைத்தட்டலையும் பெற்று விடுகிறார் பிரபு ராம்வியாஸ்..

இந்த பிப்ரவரி 14 காதலர் தினத்திற்கு நல்ல ஒரு காதல் காவியத்தை கொடுத்திருக்கிறார்..

லவ்வர் விமர்சனம் 4/5..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *