லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருதிவி பாண்டியராஜ், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன், கலை இயக்குநர் ஜெயரகு, படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா வசனகர்த்தா தமிழ்பிரபா, பாடலாசிரியர் அறிவு, சண்டைப்பயிற்சி இயக்குநர் STUNNER சாம், நடன இயக்குநர் ஸ்ரீக்ரிஷ் ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சவுண்ட் டிசைனர் சுரேன்.ஜி, விளம்பர வடிவமைப்பாளர் கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ப்ருத்வி பாண்டியராஜன் பேசும் போது,
இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன் என்று சொல்லும் போது ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்… ஆனால் இன்று “ப்ளூ ஸ்டார்” படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் என்னை என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடாமல் என் கதாபாத்திரத்தின் பெயரான “சாம், சாம்” என்று சொல்லிக் கூப்பிடும் போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வெற்றியை எனக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் கணேஷமூர்த்தி மற்றும் சவுந்தர்யா அவர்களுக்கும் நன்றிகள்.

அசோக்செல்வன் ஒரு தன்னலம் அற்ற கதாநாயகன். தான் மட்டும் ஸ்கோர் செய்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு சேர்ந்து நடிப்பவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நடிகர் எனக்குத் தெரிந்து அசோக் மட்டும் தான். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம், “இப்படம் கண்டிப்பாக உனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும், அவசரப்படாமல் பொறுமையாக இரு..” என்று கூறினான் . அவனுக்கு மீண்டும் நன்றி. இப்படத்தில் நான் இன்று இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் நண்பன் சாந்தனு தான். அவன் தான் இப்படத்தின் ஆடிஸன் போய்க் கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தான். அவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்தை வெற்றிப்படமாக்கிய மக்கள், பத்திரிக்கை, ஊடக மற்றும் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். “ என்று பேசினார்.

 

நடிகர் சாந்தனு பேசும் போது,
இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விசயம் என் வாழ்வில் நடக்கிறதா..?? என்னால் நம்பமுடியவில்லை என்று என் மனைவியிடம் நேற்று கூட பேசிக் கொண்டிருந்தேன்… சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என் வாழ்வில் முதல்முறை.

ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது. மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.

ராஜேஷ் என்னும் இந்த கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி. மிகப்பெரிய வேலையை அவர்கள் இருவரும் செய்து முடித்துவிட்டார்கள். அதைப் பேசி நடித்ததால் தான் இன்று அக்கதாபாத்திரம் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிருபனமாகி இருக்கிறது.

என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக் கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர், உதவி இயக்குநர்கள், ஓளிப்பதிவாளர் தமிழ் அமுதன் அனைவருக்கும், நன்றி. ஆல்பா பாய்ஸ் கிரிக்கெட் அணியினருக்கும், ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியினருக்கும் நன்றி. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய மக்கள், பத்திரிக்கை தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள்.

இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதை இங்கு வாசிக்க விரும்புகிறேன் என்று கூறி சாந்தனு அக்கடிதத்தை வாசித்தார். அதில் ”கே.பாக்யராஜ் கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று எண்ணிய தன் மகன் சாந்தனுவை, முதன்முறையாக நடிக்க வைத்து நடிப்புக்குள் கொண்டு வந்த கணத்தை நினைவு கூர்ந்திருந்ததோடு, “ப்ளூ ஸ்டார்” படத்தில் அதே கிரிக்கெட் விளையாடும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெற்றியை பதிவு செய்திருக்கும் சாந்தனுக்கும் , இந்த வெற்றியை அவருக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமார், தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மற்றும் சாந்தனுவோடு நடித்த சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறி இருந்தார்.

 

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-31-at-19.38.24-1-1024x683.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-31-at-19.38.24-1-150x150.jpegrcinemaசெய்திகள்  லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருதிவி பாண்டியராஜ், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன், கலை இயக்குநர் ஜெயரகு, படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா வசனகர்த்தா தமிழ்பிரபா,...