திரை விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் பட விமர்சனம்

ரக்சன் மலினா தீனா ஸ்வேதா ராகுல் உள்ளிட்ட பலர் ஒன்றாக படித்த பள்ளி மாணவர்கள்.. இவர்கள் 12 வருடங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணிகளில் அமர்கின்றனர்.

ஒரு கட்டத்தில்.. இவர்கள் படித்த சமயத்தில் பொது தேர்வு எழுதிய போது முறைகேடாக தேர்வு எழுதி பாஸ் ஆகி விட்டதாக ஒரு வழக்கு கோர்ட்டில் தொடரப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் மீண்டும் அதே வகுப்பில் பாஸ் ஆக வேண்டும் இல்லையென்றால் அவர்கள் படித்த தகுதி இழக்கப்படும் என கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது.

இதனை எடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் தாங்கள் படித்த கன்னியாகுமரி பள்ளிக்கு 3 மாதம் படிக்க திரும்பி வருகின்றனர்..

இதில் நாயகி மலினாவிடம் தன் காதலை சொல்லாமல் தவறவிட்ட நாயகன் ரக்ஷனும் திரும்பி வருகிறார்.

ஒரு சிலர் திருமணம் ஆகி ஒரு சிலர் கர்ப்பிணியாகவும் இப்படியாக பல மாணவிகளும்… ஒருவர் அதே பள்ளியில் படித்து ஆசிரியராகவும் இப்படி பல்வேறு தரப்பினரும் அங்கு வருகின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? அவர்கள் அனைவரும் படித்து தேர்வு எழுதி பாஸ் ஆகி விட்டார்களா? ரக்சன் மலினா காதல் என்ன ஆனது? காதலியை கண்ட காதலன் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

Rakshan As Karthik
Malina As Priyadharshini
Dheena As Salim
Rahul As Gautham
Swetha Venugopal As Saranya
Muthazhagan As Raghav
Melvin Dennies As Joseph
Munishkanth As Karthikeyan (PT Sir)
Arun Kurian As Arjun
Akila As Jennifer(Maths Miss)
Ashika Kader as lintosha
Natalie Lourds As Shilpha
Vishvath as யோகி

மேற்கண்ட அனைத்து நடிகர்களும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து பள்ளி மாணவர்களாகவும் அதேசமையும் படித்த பிறகு மெச்சூரிட்டி மாணவர்களாகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

நாயகன் ரக்ஷனை விட தீனா தான் படம் முழுக்க வெளுத்துக்கட்டி இருக்கிறார் ஆனால் ஒரு சில சமயங்களில் இவரின் ஓவர் பேச்சு எரிச்சலை உண்டாக்குகிறது.

மளினா ஸ்வேதா இருவரும் அழகிலும் சரி நடிப்பிலும் சரி கவர்கின்றனர்.. பிடி மாஸ்டராக முனீஸ் காந்தி நடித்திருக்கிறார்.. 10 வருடத்திற்கு முன்பு கண்டிப்பான ஆசிரியராகவும் தன் மனைவியை இழந்த பின்னர் பக்குவப்பட்ட ஆசிரியராகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் ராகுலும் ஒரு எமோஷன் காட்சியில் நட்பையும் தான் குண்டாகவும் இருப்பதால் படும் அவஸ்தைகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..

Writter & Director – Raako.Yoagandran
Cinematographer- Gopi Duraisamy
Music – Sachin Warrier
Editors – Balamurali, Shashank Mali
Art Director – Prem Karunthamalai
Lyrics – Thamarai
Costume Designer – Ramya Sekar
PRO – Sathish Kumar
Producers – Raghu Yelluru – Ramesh Panchagnula – Janardhan Chowdary – Raako.Yoagandran

கவிஞர் தாமரை பாடல்களை எழுத சச்சின் வாரியார் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. பாடல்களும் சரி பின்னணி இசையும் மனதிற்கு இதமாக இருக்கிறது.. மெலோடி பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

ஹீரோ இருந்தால் நிச்சயமாக வில்லன் இருப்பார்.. ஆனால் இந்த படத்தில் இயக்குனர் திரைக்கதை கேரக்டர்களை மென்மையாக கையாண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம்.. எந்த ஒரு கேரக்டரும் நெகட்டிவ் இல்லாமல் வில்லத்தனம் செய்யாமல் படத்தை முடித்து இருப்பது இந்த மறக்குமா நெஞ்சத்தை மறக்காத அளவிற்கு அமைந்திருக்கிறது..

பாலமுரளி & சஷாந்த் மாலிக் இருவரும் எடிட்டிங் செய்துள்ளனர்.. இடைவேளைக்கு முன்பு சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்.. காமெடி என்ற பெயரில் கொஞ்சம் தீணா பிளேடு போட்டு இருக்கிறார்.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் எமோஷன் கலந்து அதை சரி செய்து இருக்கிறார்.

கோபி துரைசாமி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. பள்ளிக்கால பருவம்.. ரியூனியன் பருவம் என இரண்டையும் வேறுபடுத்தி காட்சிகள் அமைத்திருப்பது சிறப்பு..

இயக்குனர் ராக்கோ. யோகேந்திரன்.. முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்தித்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் அதே பள்ளியில் அதே வகுப்பில் படிப்பது என்பதெல்லாம் நடக்காத காரியம் தான்.. ஆனால் அதை ஒரு வழக்காக எடுத்து வித்தியாசமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர்..

ஆக மொத்தம் எந்த காலத்திலும் நம் பள்ளி பருவத்தை நம்மால் மறக்க முடியாது நம் நெஞ்சத்தால் மறக்க முடியாது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.