ஜெய் விஜயம் விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கிய படம் ‘ஜெய் விஜயம்’.
ஆஹா கல்யாணம் டிவி சீரியல் புகழ் அக்ஷயா கண்டமுத்தன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சன் டி.வி. விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கிய மைக்கேல் அகஸ்டின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
நாயகன் ஜெய் ஆகாஷ் ஒரு விபத்தில் அடிபட்டதால் அவருக்கு நினைவுகள் மறக்கிறது. எனவே அவருக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து அவரது தந்தை மனைவி தங்கை ஆகியோர் பாதுகாப்பாக கவனித்து வருகிறார்கள்..
ஒரு கட்டத்தில் அவர் மாத்திரையை விழுங்காமல் இருந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கிறது..
அதாவது அவரது மனைவி, அவரது தங்கை அவரது அப்பா ஆகிய மூவரும் உண்மையான உறவுகள் இல்லை.. அப்படி என்றால் அவர்கள் யார்? குழம்பி போகிறார் நாயகன் ஜெய் ஆகாஷ்.
அதன் பிறகு என்ன நடந்தது? இவர்கள் மூவரும் உறவினர்களாக நடிக்க காரணம் என்ன? ஜெய் ஆகாஷ் யார்? அவருக்கு உண்மையாகவே நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதை
இந்தப் படத்தை இயக்கி தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். படம் முழுக்க அவரது ஆட்சி தான். ஆனால் படத்தை எடுத்த விதத்திலும் தயாரித்த விதத்திலும் நடித்த விதத்திலும் பெரிய அளவில் தடுமாறி இருக்கிறார். காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை.
ஆல் செம ஸ்மார்ட்டா இருக்கிறார் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அடித்து வெளுத்துக்கட்டி இருக்கிறார்.
நாயகியாக அக்ஷயா கண்டமுத்தன் நடித்திருக்கிறார் அழகும் திறமையும் நிறைந்த நடிகைக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
படத்தின் ஒளிப்பதிவு புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது அதற்கான ஒரு காரணத்தை சொல்லியிருந்தாலும் அதிலும் சுவாரசியம் இல்லை..
இசை அமைப்பாளர் சதீஷ்.. இசை கொடூரம்.. பாடல்களும் மனதில் ஒட்டவில்லை.. பின்னணி இசை என்ற பெயரில் டமால் டுமில் என சத்தங்கள் மட்டுமே வருகிறது..
ஜெய் விஜயம் என்றால் வெற்றி என்று பொருள்.. ஆனால் படத்தில் வெற்றிக்கான அறிகுறிகள் ஒன்றுமே தென்படவில்லை என்பது வருத்தம்..
