ப்ளூ ஸ்டார் விமர்சனம்.. கிரிக்கெட் ஸ்டார்

திரை விமர்சனம்

 

அரக்கோணத்தில் இரு அணிகளுக்கு இடையே உண்டாகும் ஒரு கிரிக்கெட் போட்டி தான் இந்தப் படம்.

ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டன் அசோக்செல்வன்.. இவரது தம்பி பிரித்வி.. அசோக்கின் காதலி கீர்த்தி பாண்டியன்.. ஆல்பா பாய்ஸ் அணியின் கேப்டன் சாந்தனு..

10 – 12 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இனி இந்த ஊரில் கிரிக்கெட் விளையாட கூடாது என கிராமத்து மக்கள் முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அசோக் & சாந்தனு மோதிக்கொள்ள தங்கள் பலத்தை நிரூபிக்க கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்கின்றனர்..

அதன் பிறகு என்ன ஆனது? கிரிக்கெட் போட்டியில் வென்றது யார்? ஊர் மக்கள் என்ன செய்தார்கள்? என்பதுதான் மீதி கதை.

 

அசோக் செல்வன்
ஷாந்தனு பாக்யராஜ்
பிரித்வி
கீர்த்தி பாண்டியன்
பக்ஸ்
குமரவேல்
லிஸ்ஸி ஆண்டனி
T.N அருண்பாலாஜி
திவ்யா துரைசாமி..

அரக்கோணத்தில் இளைஞர்களை அச்சு அசல் ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார்கள் அசோக் செல்வன் சாந்தனு ப்ரீத்வி.. படத்தில் சிக்ஸ்ர் போல ஒவ்வொரு சீனிலும் சிக்ஸர் அடித்து தன் நடிப்பை மெருகேற்றி இருக்கிறார் அசோக் செல்வன்.

சாந்தனுவுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை.. ஆனாலும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே அவரை பாராட்டலாம் சபாஷ் சாந்தனு..

கீர்த்தி பாண்டியனால் இப்படி கூட தமிழ் பேசி நடிக்க முடியுமா என்று அரக்கோணம் இளைஞர்களை ஆச்சரியப்பட்டு போவார்கள்.. ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி வைத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெயக்குமார்.

சீரியஸாக சென்று கொண்டிருக்கும் இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்புக்கும் ஆக்ஷனுக்கும் உதவி இருக்கிறார் பிருத்வி பாண்டியராஜன்..

இரண்டே இரண்டு காட்சிகள் வந்து கொஞ்சம் ரசிக்க வைத்து செல்கிறார் திவ்யா துரைசாமி..

முன்னாள் கிரிக்கெட் வீரராக பக்ஸ்.. அவரது காட்சிகளும் படத்திற்கும் சரி இளைஞர்களுக்கும் சரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அசோக்கின் பெற்றோர்களாக வரும் குமரவேல் மற்றும் லிஸி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

 

பாடலாசிரியர்கள்
உமாதேவி
அறிவு.

விளம்பர வடிவமைப்பு
கபிலன்,

நடனம்
ஸ்ரீக்ரிஷ்,

சண்டைப்பயிற்சி
STUNNER’ சாம்,

ஆடை வடிவமைப்பு
ஏகன் ஏகாம்பரம்

SOUND MIXING
சுரேன் G

கலை இயக்குனர்
ஜெயரகு .L

படத்தொகுப்பு
செல்வா RK

இசை
கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு இயக்குனர்
தமிழ் அ அழகன்

*தயாரிப்பு*
R. கணேஷ் மூர்த்தி
G. சௌந்தர்யா

*திரைக்கதை & வசனம்*
தமிழ்ப்பிரபா

எழுத்து – இயக்கம்
S.ஜெயக்குமார்

பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார் கோவிந்த் வசந்தா… காட்சிக்கு காட்சி சிக்ஸர் ரன்கள் அடித்துக் கொண்டிருக்கும் போது நம் பல்சை எகிற வைக்கிறது இவரது பின்னணி இசை.

உந்தன் கை வீசிடும் என்ற பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பாடலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.. பாடல் வரிகளும் சுவாரசியம்.. முக்கியமாக வசனங்களும்..

திவ்யாவும் பிருத்திவியும் பேசிக்கொள்ளும்போது எத்தனை பேருக்கு தெரியும்…. உனக்காக நவம்பரில் பூத்தது டிசம்பர் பூ என்ற வரிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

படத்தில் கிரிக்கெட்டை அடிக்கடி காட்டுவது போல அம்பேத்கர் சிலையை காட்டிக் கொண்டிருப்பது ஏனோ இயக்குனர் ஜெயக்குமார்?. கொஞ்சமாவது சாதிய சிந்தனைகள் இருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அம்பேத்கர் இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன் என்பவரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. 1990களில் உள்ள காட்சி அமைப்பை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் காதல் கொஞ்சம் நட்பை காட்டி முழுக்க முழுக்க கிரிக்கெட் போட்டியை நடத்தியிருக்கிறார் ஜெயக்குமார். முதல் பாதியில் காதல் என்பது இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கிரிக்கெட் மயமாகவே இருந்தது.

ஒரு படத்தை விட ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்து வந்த உணர்வே அதிகம் இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆக இந்த ப்ளூ ஸ்டார்.. கிரிக்கெட் ஸ்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *