திரை விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… சிங்கார சலூன்

 

தன் வீட்டு அருகே உள்ள கடையில் முடி திருத்தம் செய்பவர் சாச்சா (லால்). இவரின் அபார திறமையை சிறுவயதில் காணும் ஆர்.ஜே பாலாஜி அவரைப் போல தானும் உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.. ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என பல தடைகளை தாண்டி உயர்வது தான் இந்த படத்தின் கதை..

பெரும்பாலும் நக்கல் நையாண்டி செய்யும் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் அடக்கி வாசித்து நடிப்பில் தன் முதிர்ச்சியை காட்டி இருக்கிறார்.

நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரி அழுவதை தவிர பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

ஆர் ஜே பாலாஜிக்கு அடுத்தபடியாக சத்யராஜ் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளார்.. அது போல ரோபோ சங்கர் வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.. மலையாள நடிகர் லால் தன் அனுபவ நடிப்பால் சாட்சா கேரக்டருக்கு சபாஷ் பெற வைக்கிறார்.

கிஷன் தாஸ், தலைவாசல் விஜய் எனக் குணச்சித்திர வேடங்களில் வருபவர்களும் சிறப்பு. அதிலும் முக்கியமாக ஜான் விஜய்யின் நடிப்பு பெரிதாக பேசப்படும்.

CAST AND CREW

RJ BALAJI

MEENAKSHI CHOUDHRY

ANN SHEETAL

SATHYARAJ

LAL

Y.G MAHENDIRAN

THALAIVASAL VIJAY

CHINNI JEYANTH

JHON VIJAY

DIRECTOR : GOKUL

PRODUCER : Dr. Ishari K Ganesh

DOP : M.SUKUMAR

MUSIC : VIVEK-MERVIN

EDITOR : SELVA RK

BGM : JAVED RIYAZ

ART DIRECTOR : JAYACHANDRAN

CHOREOGRAPHER : BOOPATHY

SOUND DESIGN : SUREN.G – AZHAGIYAKOOTHAN

COSTUME DESIGNER : DIVYA NAGARAJAN

COSTUMER : DHANAPAUL

VFX SUPERVISOR : STALIN SARAVANAN

STUNT : PRABHU

DIRECTION TEAM : SENTHIL VINAYAGAR, AMEER JAMAL KHAN, VARUN RAJENDIRAN, SURESH GURU, STEPHEN, SATHISH

PRODUCTION EXECUTIVE : N. VICKY, MAHA KALI SHIVA, V. BALAMURUGAN

LYRICS : UMA DEVI, ARIVU

SPECIAL MAKEUP : ROSHAN

MAKEUP : PRAKASH

STILLS : RAJ

DI & VFX : WHITE LOTTUS

P.R.O : SURESH CHANDRA

DESIGN : DESIGN POINT

 

முதல் பாதி முழுவதும் சிரிப்பு சாரல் மழை என்றே சொல்லலாம்.. அதுவும் சத்யராஜ் வந்த பிறகு படத்தின் சிரிப்பாலே எகிற செய்கிறது.. கஞ்சத்தனம் செய்யும் மாமியார் மாமனாராக அவர் செய்யும் அலப்பறை அளவில்லாததது..

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை.. ஆனாலும் ஒரு முறை கேட்கலாம்.. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது..

சிங்கப்பூர் சலூன் கடை செட்டப்பை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

கேமராமேன் சுகுமார்.. எடிட்டர் செல்வா..
படத்தொகுப்பாளர் எடிட்டர் இருவரும் தங்கள் பணிகளில் ஷார்ப்.

இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சீரியஸ் மோடில் செல்கிறது.. நிறைய காட்சிகளை கருத்துக்களை சொல்ல வேண்டும் என இயக்குனர் கோகுல் நினைத்து விட்டாரோ? மழை வெள்ளம் ரியாலிட்டி ஷோ வேறு இடத்திற்கு குடி அமர்த்தப்படும் மக்கள் என அனைத்தையும் சொல்லி இருக்கிறார் கோகுல்.

ஆனாலும் வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இந்த சிங்கப்பூர் சலூன் நிச்சயம் ஒரு கை கொடுக்கும்..