ரூட் நம்பர் 17 விமர்சனம்
காட்டுக்குள் ஒரு வழி பாதை போல போடப்படும் ரூட் நம்பர் 17 என்பதில் பயணிக்கும் கதை தான் இந்த படம்.
நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
நாயகன் நாயகி இருவரும் ஒரு நாள் செல்போனை எல்லாம் வீட்டுக்குள் வைத்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் ஜாலியாக சுற்ற செல்கின்றனர்.
அங்கு இரவு முழுவதும் தங்கி நெருக்கமாக இருக்கின்றனர். திடீரென காட்டுவாசியாக வரும் ஜித்தன் ரமேஷ் அவர்களை கடத்தி ஒரு குகைக்குள் வைத்து சித்திரவதை செய்கிறார்.
இதனை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார். அவரையும் அடித்து அந்தக் குகைக்குள் அடைத்து சித்திரவதை செய்கிறார்.
இதன் பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டுபிடிக்க மற்றொரு போலீஸ் அதிகாரி அருவி மதன் வருகிறார்.
அவர் வந்த பிறகுதான் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கிறது.. ஜித்தன் ரமேஷ் யார்? அவர் கடத்துவதன் நோக்கம் என்ன? இவர்களை மட்டும் குறி வைத்து கடத்தியதன் குறி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க நாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க காட்டுக்குள்ளும் குகை சொல்லும் கதை நகர்கிறது. அனைவரும் தங்கள் கேரக்டருக்கு ஏற்ப தங்களது பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர் அதிலும் ஜித்தன் ரமேஷ் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் படத்தில் அவர் வில்லனா நாயகனா என்று குழப்பம் நீடிக்கும் வகையில் வித்தியாசமான கதை பாத்திரத்தை செய்திருக்கிறார்.
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்திற்கும் அடிப்படையாமல் நேர்மையான அதிகாரியாக தன்னுடைய பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கிறார் ஜித்தன் ரமேஷ். இரண்டாம் பாதியில் நீண்ட தலை முடி தாடி என வித்தியாசமான தோற்றத்தில் பயங்கரமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
அருவி மதன் ஹரிஷ் போராடி ஆகியோரின் பாத்திரங்கள் அருமை.
நாயகி அஞ்சு பாண்டியாவை நிச்சயமாக பாராட்ட வேண்டும். சில காட்சிகளில் கலர்ஃபுல்லாக வந்த அவர் என்பது சதவீதம் படத்தில் சேட்டில் குளித்தது போலவே வருகிறார். குகைக்குள் அடைப்பட்டு அவர் படும் அவஸ்தைகளை பாடி லாங்குவேஜில் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர்களுடன் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் மற்றும் பலர் கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டுள்ளனர்.
பிரசாந்த் ஒளிப்பதிவு செய்ய மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இசையமைத்துள்ளார்.
பிரசாந்த் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பல காட்சிகள் பாராட்டு படி வகையில் உள்ளது. குறிப்பாக கூல்ட்ரிங்ஸ் பாட்டில் தவறி விழும் காட்சி… ரோட்டில் டயர் வேகமாக நிற்கும் காட்சி.. அடர்ந்த காடு என அனைத்தையும் சிறப்பாக படம் எடுத்து கண்களுக்கு குளிர்ச்சி ஏற்றி இருக்கிறார்
அவுசப்பசன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது தாலாட்டு பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு தாலாட்டும் படியாக உள்ளது..
பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பேய் படம் போல ஆரம்பித்து திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
காட்டை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் என பார்த்து பழகிப்போன கதை தான் என்றாலும் அதை கொஞ்சம் திரில்லர் கதையாக மாற்றி கொடுத்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் இயக்குனர்.
இப்படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியானது.