ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பட விமர்சனம்
1993 ஆண்டில் கதை தொடங்குகிறது. நானும் பேய் தான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் ஜார்ஜ் மரியான்.
அவர் அந்த தியேட்டரில் சென்ற பிறகு சிக்கி கொள்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு 13 நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்து அந்த தியேட்டருக்கு படம் பார்க்க வருகின்றனர் வாங்க அங்கிள் விளையாடலாம் என்ற ஏ பிட்டு படத்தை பார்க்க வருகின்றனர்.
அவர்களும் எதிர்பாராத விதமாக அந்த தியேட்டரில் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி என்னதான் அந்த தியேட்டரில் நடந்தது? அந்த தியேட்டரில் நடக்கும் அமானுஷ்ய சக்தி என்ன? அதன் நோக்கம் என்ன? இவர்களை பழிவாங்க துடிப்பதன் காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி
ஒரு சினிமா தயாரிப்பாளராக தியேட்டர் ஓனராக வரும் முனிஸ்காந்த் காட்சிகள் படத்திற்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. அவரது காட்சிகள் ரசிக்கும் படியாகவும் அந்த பிளாஷ் பேக் போஷன்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுக்கின்றன.
சாரா அப்துல் ஆர் எஸ் கார்த்திக் ரித்விகா ஆகியோர் முகம் தெரிந்த நடிகர்கள். அதிலும் பிளாஷ் பேக் காட்சிகள் மட்டுமே காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கிறது. பேய் காட்சிகளில் கொஞ்சம் கூடுதலான பேய் உழைப்பை கொடுத்திருக்கலாம்
மேற்கண்ட வரிசையில் உள்ள நடிகர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு தங்களால் முடிந்த வரை முயற்சி செய்துள்ளனர். ஆனால் இன்னும் கூடுதல் சிரமம் எடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கலாம்.
Youtube-ல் பிரபலமான விஜய் ஹரிஜா கோபி சுதாகர் ஆகியோர் சினிமாவிற்காக இன்னும் கூடுதல் மெனக்கட்டு காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கலாம். அல்லது தங்களது பாடி லாங்குவேஜை மாற்றிக் கொண்டு நடித்திருக்கலாம். Youtube போலவே அவர்களின் காட்சிகள் இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.
நாயகனாக சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார். ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் அவருக்கான காட்சிகள் குறைவு.
படத்தின் ஒளிப்பதிவு எந்தவிதமான குறையும் இல்லை.. பின்னணி இசை சில இடங்களில் பாராட்டும்படியாக இருக்கிறது. ஆனால் திரைக்கதை சற்று மோசம். சுவாரசியமான காட்சிகள் பெரிதாக இல்லை.
25 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த படத்தை கொடுத்திருக்கின்றனர். அவர்கள் முயற்சிக்களுக்காக கை கொடுத்து பாராட்டலாம். அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக கொடுப்பார்கள் என நம்புவோம்.
ஒரு தியேட்டரில் சிக்கிக் கொண்டவர்கள் பேயிடம் மாட்டிக் கொண்டு ஓடவும் முடியாமல் ஒளியும் முடியாமல் படும் அவஸ்தைகளை இந்தப் படம் சொல்கிறது.