மூத்தகுடி விமர்சனம்.. 3/5.. ‘குடி’ ஏறாத ஊர்
1970களில் ஒரு குடி பிரச்சனையால் மூத்த குடி என்ற ஊர் பாதிக்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த ஊரில் எவரும் குடிக்கக்கூடாது என அந்த ஊர் பெரிய மனுஷி கே ஆர் விஜயா கட்டளை இடுகிறார். அதன்படி ஊரும் கட்டுப்பட்டு 15 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் செல்வந்தர் ராஜ்கபூர் ஒரு கட்டத்தில் அங்கு சாராய ஆலை திறக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தலையாரியை தன் வலையில் விழ வைக்கிறார். அவரும் மரணம் அடைகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என ஊர் மக்கள் அறிந்து கொண்டார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் பளிச்சென்று வருபவர் அன்விஷா. தனக்கேற்ற கேரக்டரை அருமையாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் இல் இவர் எடுக்கும் அவதாரம் ரசிக்கும் ரகம்.
நாயகன் தருண் கோபி ஏனோ தானா என்று வந்து செல்பவர் திடீரென தனக்கு கிடைக்காத பெண்ணுக்காக ஏங்கும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். சில நேரம் ஓவர் ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரகாஷ் சந்திரா படம் முழுவதும் வந்தாலும் அவரது முகத்தில் பிரகாசம் இல்லை.
ஆர் சுந்தரராஜனிடம் 5000 ரூபாய் வாங்கிவிட்டு சிங்கப்புலி ஏமாற்றும் கதை… பழைய நகைச்சுவையாக இருந்தாலும் இன்று இளைஞர்களுக்கு ரசிக்க வைக்கும்
கே ஆர் விஜயா அலட்டிக் கொள்ளாமல் வந்து செல்கிறார். பழைய வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் ராஜ்கபூர்.
இயக்குனர் ரவி பார்க்கவன் என்னதான் பெயரில் பார் இருந்தாலும் படத்தில் சாராயம் பார் ஏதும் இருக்கக் கூடாது என போராடி இருக்கிறார். ஆனால் லோ பட்ஜெட்டில் படத்தை எடுத்திருக்கிறார்.
எனவே படம் முழுவதும் நாடகத் தன்மையை காண முடிகிறது. ஒரு சில கேரக்டர்கள் தவிர மற்றவர் கேரக்டரில் செயற்கை தனமான நடிப்பை காண முடிகிறது.
படத்தின் ஆரம்பத்தில் டாஸ்மாக் திறக்க கூடாது என மூத்த குடிமக்கள் போராடுகின்றனர்.. அவர்கள் போராட என்ன காரணம் என்பதை படத்தின் பிளாஷ்பேக்காக விவரிக்கிறது.
மக்கள் போராடினால் மாற்றம் உண்டாகும் என்பதுதான் படத்தின் கருவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.