மூன்றாம் மனிதன் விமர்சனம்..
கணவன் மனைவி என்ற உறவுக்குள் மூன்றாவதாக ஒரு ஆணோ / ஒரு பெண்ணோ வந்து விட்டால் என்னென்ன விளைவுகள் நடக்கும் என்பதுதான் இந்த மூன்றாம் மனிதன் படத்தின் கதை.
இயக்குனர் ராம் தேவ் நாயகன் இவரது மனைவி பிரணா. இவர்கள் இருவரும் கணவன் மனைவி. குடிக்கு அடிமை ஆகிறார் ராமர். எனவே வேலைக்கு சரியாக செல்வதில்லை.
இதனை எடுத்து மனைவி பிரனா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி சோனியா அகர்வால்.
அங்கு பிரானாவுக்கு இன்ஸ்பெக்டர் உடன் ராங் கனெக்சன் ஏற்படுகிறது. இதனால் மேலும் ராமர் குடிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார் இதனால் போலீஸ் விசாரணை வேட்டையில் இறங்குகிறது.
ராமர் கொலை செய்தாரா என பாக்கியராஜ் ஆனால் ராமர் கொலை செய்யவில்லை என்கிறார். அப்படி என்றால் கொலை செய்தது யார்? என்பதுதான் படத்தின் மீதி கதை
போலீஸ் இன்ஸ்பெக்டர் (இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்- இயக்குனர்,K. பாக்யராஜ்
ரம்யா – சோனியா அகர்வால்
கௌதம் – இயக்குனர் ஸ்ரீநாத்
ராமர் – இயக்குனர் ராம்தேவ்
செல்லம்மா – பிரணா
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் – ரிஷிகாந்த்
கொலை குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ரெண்டு பசங்க – ராஜ், கார்த்திக்ராஜா.
ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர் – சூது கவ்வும் சிவக்குமார்
பாக்கியராஜ் சார் உடன் வருபவர் – எஸ் ஐ ராஜகோபால்
போலீஸ் ஏட்டையா – மதுரை ஞானம்
படத்தின் நாயகி சோனியா அகர்வால் என சொன்னாலும் முக்கிய கேரக்டர் ஏற்று படத்தை முழுவதும் தாங்கி நிற்கிறார் நாயகி பிரனா. இளம் வயதிலேயே ஒரு முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார்.
ராமர் குடிகாரன் கேரக்டருக்கு பொருத்தமாகவே நடித்திருக்கிறார். நாயகி சோனியாவுக்கு பெரிய வேலை இல்லை. பாக்கியராஜ் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
மற்றபடி கொலைகாரர்களாக மாறும் இரண்டு சிறுவர்களும் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.. முக்கியமாக பிரானாவுக்கு அட்வைஸ் சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. கண்கலங்கவும் வைக்கிறது.
ஒளிப்பதிவு – மணிவண்ணன்
பாடல்கள் இசை – வேணுசங்கர்& தேவ் ஜி
பின்னணி இசை – அம்ரிஷ் .P
பாடல்கள் – ராம்தேவ்
எட்டிடிங் – துர்காஸ்
கலை இயக்குனர்
T.குணசேகர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்:ராம்தேவ்
இணை தயாரிப்பாளர்கள்
மதுரை C.A. ஞானோதயா
டாக்டர்.M. ராஜகோபாலன்
டாக்டர்.D. சாந்தி ராஜகோபாலன்
தயாரிப்பு : ராம்தேவ் பிக்சர்ஸ்
கணவன் மனைவிக்குள் மற்றொருவன் அல்லது ஒருத்தி வந்து விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதான் படத்தின் முழுக்கதை.. ஆனால் படம் முழுவதும் எல்லா கேரக்டரிலும் கள்ளக்காதல் கள்ளக்காதல் வந்து செல்வது ஒரு கட்டத்தில் போர் அடிக்கிறது.
கள்ளக்காதல் கதையில் பிரியாணி காதல் நாம் பார்த்த சம்பவம் தான் அதையும் ஒரு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது.
என்னதான் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவி உறவுக்குள் வேறு யாரையும் அனுமதிக்க கூடாது என்பதை கருவாக சொல்லி இந்த ‘மூன்றாம் மனிதன்’ படத்தை முடித்திருக்கிறார்.
முக்கியமாக குழந்தைகளுக்காக பெற்றோர்கள் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.