டங்கி விமர்சனம் 3.75/5

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் 1000 கோடி வசூலை ஈட்டியது. தற்போது டங்கி வந்திருக்கிறது இது ஆயிரக்கோடியை எட்டுமா என்பதை பார்ப்போம்?
விசா இல்லாமல் திருட்டுத்தனமாக மற்ற நாடுகளுக்கு செல்வதை டாங்கி என்றும் கழுதை செல்லும் பாதையை இந்திய மொழியாக்கமாக இந்த டங்கியாம்.
3 இடியட்ஸ் , முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டங்கி.
நான்கு நண்பர்கள் விசா இல்லாமல் ஒரு நாட்டிற்கு செல்ல நினைக்கின்றனர். அவர்களுக்கு உதவுகிறார் ஷாருக்கான்.
25 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானை தொடர்பு கொள்கிறார் டாப்ஸி. உதவி கேட்கிறார். ஷாருக்கும் உதவி செய்கிறார்.
இவர்கள் இருவருக்கும் என்ன உறவு?சட்டவிரோதமாக ஏன் செல்கிறார்கள்? என்பதுதான் இந்த படம்.
வயதானவர் இளைஞர் என்ற இரு கொஞ்சம் டை அடித்தால் வயதானவர் மீசையை சேவிங் செய்தால் இளைஞர் என்பது ஷாருக்கானின் ஃபார்முலா.
மறைந்த நண்பனின் அஸ்தியை வைத்துக்கொண்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில் பேசும் வசனம் செம. கிளைமாக்சிலும் அசத்தி விடுகிறார் ஷாருக்கான்.
அதுபோல டாப்ஷி இரண்டு தோற்றங்களில் வருகிறார். அவரும் நடிப்பில் டாப் லெவல் தான்.. ஷாருக்கிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சி வேற லெவல் டாப்ஸி.
இங்கிலாந்து சென்ற காதலியை மீட்க அவர் போராட போய் அது முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விக்கி கௌஷல் மிரட்டி இருக்கிறார்.
ஒரு ராணுவ வீரர் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதும் மற்றவர்களுக்கு உதவுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுபோல சில பெண்களின் உருவமாக திகழ்கிறார் டாப்ஸி. அதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மற்றவர் உதவியை நாடுவது இல்லையென்றால் கழட்டி விடுவது என்ற வகையான புரிதல்.
படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் படி வகையில் உள்ளது. முக்கியமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கிறது
இந்தியாவை வெறுக்கும் நாயகி டாப்ஸிக்கு ஒரு இந்தியர் உதவுவதை ஏற்க முடியவில்லை. அதுபோல இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும் என காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இப்படியாக காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தாலும் சட்ட விரோதமாக சென்றால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதையும் காட்சிகளாக வைத்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இயக்குனர்.
