Latest:
திரை விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்..

அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

குடிபோதையில் வண்டி ஓட்டி போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார் நாயகன் அசோக் செல்வன். போலீஸ் ஜிப்பில் செல்லும் போது தன்னுடைய காதலை பிளாஷ்பேக்காக சொல்லிக் கொண்டு செல்கிறார்.

காதலித்தது எப்படி? காதலிகள் யார்? அவர் செய்த சேட்டைகள் குறும்புகள் என்ன என்ன என்பதுதான் படத்தின் கதை.

அசோக் செல்வனின் கதை தேர்வு ரசிக்க வைக்கிறது. படத்துக்கு படம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என தன் வயதுக்கு ஏற்ப கதைகளை அவர் தேர்வு செய்து நடிப்பது பாராட்டுக்குரியது.

கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன் ஆகியோர்..

12 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்த்திகா முரளிதரன் மீது காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி சௌத்ரி உடன் காதல், எம்பிஏ படிக்கும் போது மேகா ஆகாஷ் மீது காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடந்த காதல்கள் சூப்பர்.

ஆனால் கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது மைனஸ்.

அசோக்செல்வனின் நண்பர்களாக வரும், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் என அனைத்து கேரக்டர்களும் நடிப்பில் சிறப்பு.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்
ஒளிப்பதிவு அருமை.

கல்லூரி ஷாட்களும், பாடல் லொகேசன்களும் கண்களுக்கு குளிர்ச்சி. லியோ ஜேம்ஸின் இசையில் நல்ல ஒரு எனர்ஜி.

எடிட்டர் கணேஷ் சிவா தான் நம் பொறுமையை சோதித்து விடுகிறார்.

மொக்கையான காதலுக்கு ஒரு நல்ல முடிவை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன். ஆனால் படத்தின் நீளம் நெருடல்..

பெண்கள் பணம் இருந்தால் தான் பார்ப்பார்கள் என்கிற ரீதியில் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக 90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ்களுக்கு இந்த படம் நன்றாகவே பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.