திரை விமர்சனம்

ஃபைட் கிளப்’ விமர்சனம் 3.5/5

‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் அப்பாஸ் ஆர்.ரஹ்மத் இயக்கத்தில் டிசம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் படம் ஃபைட் கிளப்.. லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார்.

பாக்ஸிங் தான் தன் உயிர் என நினைத்து அதற்காகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார் பெஞ்சமின். ஆனால் பல சதி வேலைகளால் அவரின் எண்ணம் நிறைவேறாமல் போகிறது.

தன்னால் அடைய முடியாததை மற்றவர்கள் அடைய வேண்டும் எண்ணி அந்த ஊருக்காகவே வாழ்கிறார் பெஞ்சமின். ஆனால் இவரது தம்பி ஜோசப் தவறான வழிகளில் செல்கிறார்.

இதனால் அண்ணன் – தம்பி இருவருக்கு பிரச்சனை வருகிறது. எனவே கிருபா உதவியுடன் அண்ணனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார் ஜோசப்.

அதன்படி அண்ணனை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கூறும் ஜோசப். ஆனால் அவனை ஜாமீனில் எடுப்பதாக சொன்ன கிருபா எடுக்கவில்லை.

ஜெயிலில் சிக்கிய ஜோசப் என்ன செய்தான்.? இந்த கதைக்குள் செல்வா என்ற விஜயகுமார் எப்படி வருகிறார் என்பதன் படத்தின் மீதிக்கதை.

செல்வாவாக நடித்து இருக்கிறார் விஜயகுமார். துடுதுடுப்பானா துறுதுறுவாற வடசென்னை இளைஞன் உருவத்தை பிரதிபலிக்கிறார் விஜயகுமார்.

நாயகியாக மோனிஷா மோகன் நடித்து இருக்கிறார். இவருக்கும் படத்திற்கும் சம்பந்தம்?? கதையுடன் நாயகி ஒட்டவில்லை. அதிலும் நாயகனுடன் ரொமான்ஸ் இல்லை.

கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், அவினாஷ் உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர்.

இதில் ஜோசப்பாக நடித்திருக்கும் அவினாஷின் நடிப்பு மிரட்டல் ரகம்.

96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

படத்தை இயக்கியிருக்கிறார் அப்பாஸ்.. தயாரித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்..

வழக்கமான வட சென்னை கேங்ஸ்டர் கதை தான். இதுவும் வழக்கத்திற்கு மாறாக இல்லை.

ஆனால் படத்தின் மேக்கிங் லெவல் வேற லெவல்.. சாதாரண கதையை மேக்கிங் மூலம் பிரம்மாண்டப்படுத்தி காட்டியிருக்கிறார் அப்பாஸ்.

எனவே ஃபைட் கிளப் படத்திற்கு அப்ளாஸ் கொடுக்கலாம்..