கண்ணகி விமர்சனம் 3.5/5..

கண்ணகி படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்க ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது.
நான்கு இளம் பெண்களின் கதையை இணைக்கும் கதை தான் இந்த கண்ணகி.
அம்மு அபிராமிக்கு எந்த வரணும் செட் ஆகவில்லை எனவே திருமணத்திற்காக காத்திருக்கிறார். கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் அவரது கர்ப்பத்தை கலைக்க சொல்லி காதலர் வற்புறுத்துகிறார்.
அடுத்த கதையில் வித்யா பிரதீப் கணவன் விவகாரத்து கொடுத்தாலும் கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என நீதிமன்றம் செல்கிறார். ஷாலின் ஜோயா திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் லிவிங் டுகெதரில் வாழ்கிறார்.
இவர்களின் முடிவு என்ன என்பதுதான் கதை.
கீர்த்தி பாண்டியனுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் முகபாவனைகளில் வித்தியாச காட்டி உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். முக்கியமாக அவர் திருமணத்திற்கு பின்பு வந்திருக்கும் முதல் படம் இது.
முதல் வாழ்க்கை வீணாகிவிட்டது. 2வது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என வித்யா பிரதீப் நினைப்பது விவகாரத்து பெண்களின் உணர்வை பிரதிபலிக்கிறது.
வாழ்க்கையில் ஜாலியாக வாழ வேண்டும் என ஷாலின் ஜோயா நவீன பெண்களின் உருவமாக வருகிறார்.
அம்மு அபிராமியின் வாழ்க்கை கல்யாணம் தள்ளி போகும் பெண்களின் உணர்ச்சிகளை கொட்டி இருக்கிறது..்ஒவ்வொரு வரனும் நெருங்கும்போது ஒவ்வொரு ஆண் மகனையும் எப்படி கணவனாக பார்க்க முடியும் என அவர் கேள்வி கேட்பது கலங்க வைக்கிறது.
ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக அருமை. ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் படத்தொகுப்புபாளர் படத்தின் நீளத்தை வெட்டி இருக்கலாம்.
அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்… சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் கையாண்டுள்ள விதம் வித்யாசமான கதை ஓட்டம்.
அதே சமயம் முதல் பாதியில் இருந்த திரைக்கதையின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தமே.
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று என்றாலும் மனதில் நெருக்கமாக இல்லை. காரணம் க்ளைமாக்ஸ் குளறுபடி. அதை முடித்து இருப்பது நிறைய பேருக்கு புரியாமல் போகலாம்.
ஆக கண்ணகி… கண்மணி
