சினிமா செய்திகள்

மீண்டும் ரசிகர்களை ‘ஆளவந்தான்’ கமலஹாசன்

எத்தனையோ படங்களில் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதே போல ஹீரோவே வில்லனாக நடித்த படங்களையும் பார்த்திருக்கிறோம்.. ஆனால் சாதாரண உடல் உடன் ஒரு ஹீரோ.. முரட்டுத்தனமான அதிக எடை உள்ள வில்லன் என இரண்டு விதமான தோற்றங்களை காட்டி ரசிகர்களை மிரட்டியவர் கமல்ஹாசன்.

அந்த படம் தான் ‘ஆளவந்தான்’.. 14 நவம்பர் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி தாணு தயாரிக்க நாயகிகளாக ரவீனா டான்டன் மற்றும் மனிஷா கொய்ராலா இருவரும் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் இந்த படத்தை புதுப்படத்தை பார்ப்பது போல கமல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியமாக 2001 ஆம் ஆண்டில் பிறந்த 2k கிட்ஸ் தற்போது இந்த படத்தை பார்த்து ரசித்து வருவதை பாராட்டி வருவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

இந்த படம் 20 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத காரணங்களால் தோல்வியை தழுவினாலும் இப்போது முற்றிலும் 4 கே டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்துள்ளதால் புதிய படத்தை பார்ப்பதை போன்ற உணர்வுள்ளதாஐ ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஆளவந்தான் சிறப்புக் காட்சியில் ஆர்கே செல்வமணி லிங்குசாமி உள்ளிட்ட பல திரை கலைஞர்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.