லாக்கர் விமர்சனம் 3.5/5… திறந்து பாருங்க
ஒரு திருடன் தான் இந்த படத்தின் நாயகன்.. சதுரங்க வேட்டை & ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களின் கலவைதான் இந்த லாக்கர்.
நாயகன் விக்னேஷ் சண்முகம்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணத்தை கொள்ளை அடிக்கிறான். ஆனால் நாயகனை ஏமாற்றும் நாயகி நிரஞ்சனா. ஆனாலும் நாயகி மீது காதல் கொள்கிறார் விக்னேஷ் சண்முகம்.
என்ன நினைத்தாரோ? நீ ஒரு திருடன்.. இந்த வாழ்க்கை எனக்கு செட்டாகாது என நாயகி மறுக்கவே நிரஞ்சனாவுக்காக திருந்தி வாழ்கிறார் விக்னேஷ்.
ஒரு கட்டத்தில் திருடர்களிடமிருந்து திருடினால் தவறு இல்லை என்கிறார் நாயகி. எனவே மீண்டும் பழைய பாதைக்கு திரும்புகிறார் நாயகன்.
இடையில் என்ன நடந்தது? நாயகியின் மனநிலை மாற்றத்திற்கு என்ன காரணம்? நாயகன் விக்னேஷ் என்ன செய்தார்? மீண்டும் கொள்ளை அடித்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் இதற்கு முன் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் லாக்கர் படம் நிச்சயம் அவருக்கு ஓபனிங் கொடுக்கும். காரணம் யதார்த்தமான நடிப்பு.. எங்கும் மிகையில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் மெச்சூரிட்டி போதவில்லை
நாயகிக்கு இதுதான் முதல் படம்.. நிரஞ்சனா நிறைவான நடிப்பு கொடுத்திருக்கிறார். இவரது கேரக்டர் ட்விஸ்ட் சற்று யூகிக்க முடிகிறது.
நிவாஸ் ஆதித்தனின் வில்லத்தனத்தில் கூடுதல் கவனத்தை கொடுத்து இருக்கலாம். காரணம் இவரே ஒரு நாயகன் போன்றே ஸ்மார்ட்டாக இருக்கிறார்.
நிரஞ்சனாவின் தந்தையாக சுப்ரமணியன். பல படங்களில் இவரை பார்த்து இருந்தாலும் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்றிருக்கிறார்.
இவர்களுடன் நாயகனின் நண்பர்களும் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் சீனிவாசன். இவரது இசையில் ‘வா பறப்போம் நிலை பறப்போம்’… ‘யாரோ போல்’ பாடல்கள் கவர்கிறது.
ஒளிப்பதிவை தணிகை தாசன் செய்திருக்கிறார். சின்ன பட்ஜெட் படம் என்றாலும் தன்னுடைய பணியில் பெரிய பட்ஜெட்டை காட்டி இருக்கிறார்.
ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் ஆகிய இருவர்கள் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். படத்தின் கொள்ளையடிக்கும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பரபரப்பை கூட்டி இருக்கலாம்.. முக்கியமாக தங்க கட்டிகளை கொள்ளையடிக்கும் காட்சிகளில் சுவாரசியம் போதவில்லை.
நாயகன் கொள்ளையடிக்கும் அறையில் ஒரு சிசிடிவி கேமரா கூடவா இருக்காது? நாயகன் எந்த முகமூடியும் இல்லாமல் அசால்டாக கொள்ளையடிப்பது நம்பும்படியாக இல்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்திருப்பது இயக்குனர்களின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
ஆக இந்த லாக்கர்.. திறந்து பார்க்கலாம்