திரை விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் 4/5

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

1975 ஆண்டும் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. தன் தந்தை ஆசைப்படி போலீசாக வேண்டும் என நினைக்கிறார் எஸ்.ஜே சூர்யா.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நாள் நாலு பேரை கொன்ற குற்றத்திற்காக (செய்யாத) இவர் ஜெயில் தண்டனைக்கு உள்ளாகுகிறார்.

எஸ் ஜே சூர்யாவின் சூழ்நிலை அறிந்த ஒரு போலீஸ் ஒரு நிபந்தனை விதிக்கிறார். மதுரை ஜிகர்தண்டா கேங்ஸ்டர் லாரன்ஸை நீ கொலை செய்தால் உனக்கு போலீஸ் வேலை கிடைக்கும் என கட்டளையிடுகிறார்.

ஆனால் எப்படி லாரன்ஸ் நெருங்குவது என எஸ் ஜே சூர்யா யோசித்துக் கொண்டிருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைக்கிறார் லாரன்ஸ்.

எனவே நல்ல கதை உள்ள இயக்குனர் தேவை என்ற விளம்பரம் வருகிறது. அதனைப் பார்த்து எஸ்.ஜே சூர்யா தான் ஒரு இயக்குனர் உங்களை இயக்க வேண்டும் என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? எஸ் ஜே சூர்யா உண்மையில் யார் என்று தெரிந்து கொண்டாரா லாரன்ஸ்? அவர் ஆசைப்பட்டபடி தமிழ் சினிமாவில் கருப்பு ஹீரோ ஆனாரா்? இவர்கள் இருவரின் திட்டம் நிறைவேறியதா ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இதுவரை ஏற்காத வித்தியாசமான கேங்ஸ்டர் கேரக்டரில் லாரன்ஸ் வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. அவரது கூர்மையான கண்களும் சுருளான தலைமுடியும் கருத்த தேகமும் ஒரு ரியல் டானை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

முதல் பாதி ஒரு லாரன்ஸ் என்றால் இரண்டாம் பாதி வேறொரு லாரன்ஸ் என இரண்டு மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

1975 களில் நாம் பார்த்து ரசித்த ஹீரோக்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அந்த காலத்து உடை நடை பாவனை என அனைத்தையும் மாற்றி வித்தியாசமான மீசை வைத்து நமக்கு கொஞ்சம் சிரிப்பையும் வர வைக்கிறார்.

லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் எனலாம்.

எஸ் ஜே சூர்யாவை முறை பெண்ணாக நடித்திருக்கிறார் ஒரே காட்சி என்றாலும் கவனம் இருக்கிறார்.

இவர்களுடன் இளவரசு, சத்யன் போலீஸ் அதிகாரி, சேட்டானி, தமிழக பெண் முதல்வர் உள்ளிட்ட பலரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர்.

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கலை இயக்குனர் தன் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். 1970 – 80களில் உள்ள தியேட்டர்.. சைக்கிள், உடை & சிகை அலங்காரம் முதல் என ஒவ்வொன்றையும் ரசித்து வடிவமைத்திருக்கிறார்.

அதுபோல சந்தோஷ நாராயண இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை டைம் ட்ராவல் போல 1970 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்கிறார்.

கேங்ஸ்டர் கதையை கொஞ்சம் நகைச்சுவை கலந்து அழகாக வடிவமைத்து தீபாவளி விருந்து படைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றாலும் அதில் காடு வளம் அதில் பேசப்படும் அரசியல் போலீசின் சதித்திட்டம் உள்ளிட்டவைகளை கலந்து ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார். ஒரு மூன்று மணி நேரம் திரைப்படத்தால் 30 வருட அரசியல்வாதியின் வாழ்க்கையை காலி செய்ய முடியும் என சொல்லி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அதன்படி நிச்சயம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *