மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம் 4/5

1995 ஆண்டில்… விஷால் – எஸ் ஜே சூர்யா இருவரும் நண்பர்கள். தன் ஒரிஜினல் மகனை விட விஷால் மீது தான் அன்பை பொழிகிறார் அப்பா எஸ்.ஜே.சூர்யா..
இதே 1995 ஆண்டில் விஞ்ஞானி செல்வராகவன் ஒரு டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு மட்டுமே செல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட தேதிக்கு ஒரு முறை மட்டுமே போன் செய்ய முடியும் என்ற 5 நிபந்தனைகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் பார்ட்டிக்கு செல்கிறார் செல்வராகவன். அப்போது நடந்த விபத்தில் எதிர்பாராத விதமாக மெக்கானிக் விஷால் கைக்கு செல்கிறது அந்த டைம் டிராவல் டெலிபோன்.
இதனை வைத்து 1975 இல் நடந்த நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்பு தொடர்பு தன் இறந்து போன அம்மாவுடன் பேசுகிறார். மேலும் தன் அப்பாவின் நண்பர் நிழல்கள் ரவி மூலம் தன் தந்தை டான் என்றாலும் ஒரு நேர்மையானவர் என்பதை அறிகிறார்.
எனவே தன் தந்தை உடன் பேச முயலும் போது 1995 இல் உள்ள எஸ் ஜே சூர்யா தடுக்கிறார். தன் தந்தையை விட மேலாக நினைக்கும் எஸ் ஜே சூர்யா தடுப்பதன் நோக்கம் என்ன என குழம்பித் தவிக்கிறார் விஷால்.
இந்த சூழ்நிலையில் தன் தந்தை மரணத்திற்கு காரணமே அவரின் நண்பர் எஸ் ஜே சூர்யாதான் என்பதை அறிகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது ? இந்த டைம் ட்ராவல் மெஷினை வைத்து தன் தந்தையை மீட்டெடுத்தாரா விஷால்.? எஸ் ஜே சூர்யா என்ன செய்தார் ? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.
அப்பா – மகன் என 2 விஷால்.. அதுபோல அப்பா மகன் என 2 எஸ் ஜே சூர்யா. தாடி வைத்த டான் விஷால்.. மீசையில்லாத மெக்கானிக் விஷால்.. என இரண்டு கேரக்டர்களுக்கும் தோற்றத்திலும் குரலிலும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் விஷால்.
கிளைமாக்ஸ் காட்சியில் மொட்டை தலையுடன் விஷால் வருவது வேற லெவல் கற்பனை. அனகோண்டாவுடன் வில்லத்தன கலந்த நடிப்பில் மிரட்டி இருக்கிறார் விஷால். அதே சமயம் நடிகர் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட் போல தலையை ஆட்டிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஆணி.
விஷாலை விட அதிகமான நேரத்தில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் போலவே படம் முழுக்க வருகிறார். வில்லனுக்கு நிறைய இடம் கொடுத்த விஷாலை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அந்த மனது எல்லா ஹீரோக்களுக்கும் வருவதில்லை.
எஸ்ஜே. சூர்யாவின் இரண்டு கேரக்டர்கள் தான் படத்தின் பெரிய பலம். டைட்டில் கார்டில் அவருக்கு நடிப்பு அரக்கன் என்று பொருத்தமான பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாயகிகள் அபிநயா & ரித்து வர்மா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதம்
தெலுங்கு நடிகர் சுனில், ஒய் ஜி மகேந்திரன் ரெடின் கிங்சிலி ஆகியோரும் உண்டு. நாயகர்கள் இருவருக்கும் மிகப்பெரிய வில்லனாக சுனில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் இளசுகளையும் சூடேற்றி கிறங்கடித்துள்ளார் சில்க் ஸ்மிதா. இவர் வந்த பின் எஸ் ஜே சூர்யா மனசாட்சி போடும் ஆட்டம் வேற லெவல் ரகம். மகனைக் காப்பாற்ற முடியாமல் ம——க்கு சிலுக்கு பத்தி என்ன தெரியும் என எஸ் ஜே சூர்யா கேட்பது தனி ரகம்.
எஸ் ஜே சூர்யாவும் அவரது மகனும் பேசிக் கொள்ளும் டெலிபோன் காட்சிகள் அலப்பறை ரகம்.. இவர்கள் போடும் திட்டத்தை நடிகைகள் சில்க் & மஞ்சுளா வந்து கெடுப்பது ரகளையான சுவாரசியம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஜிவி பிரகாஷ் இசையில் டி.ஆர் பாடிய ‘அதிருதா மாமு..’ ஆட்டம் போட வைக்கிறது.
அதுபோல ‘ஐ லவ் யூ டி..’ என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது. இதுவரை ரித்து வர்மா இது போல ஆட்டம் போட்டு யாரும் பார்க்கல.
இரண்டு விஷால்.. இரண்டு எஸ் ஜே சூர்யா.. என நால்வருக்கும் தனித்தனி பின்னணி இசை கொடுத்து படத்தின் எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளார் ஜீவி பிரகாஷ்.. அதுபோல 1975ல் ஹிட்டான பாடல்களை ஆங்காங்கே கொடுத்து காட்சிக்கு இசை சுவை ஊட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர். இவர்களின் இருவரின் பங்களிப்பு மிகப்பெரியது.
அதுபோல ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ள சண்டை பயிற்சியை இயக்குனர்கள் நால்வரும் நான்கு ரகம். சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோர் வேறலெவல்.
அபிநந்தன் ராமனுஜத்தின் ஒளிப்பதிவு அருமை.. 1975ல் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த டபுள் டக்கர் பஸ் இன்றைய ரசிகர்களுக்கு ஆச்சரிய தகவல்..
வேலுகுட்டியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை கூட்டினாலும் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் எடிட்டர்.
டான் விஷாலிடம் உதவி கேட்பது போல 1975ல்சில்க் ஸ்மிதா வருவதாக காட்சிகள் உள்ளன. அவர் சினிமாவுக்கு இருந்து பிரபலமானது 1980களில் தான்.. இதுபோல லாஜிக் பார்க்காமல் சில்க்கை மட்டும் ரசிக்கலாம். அவரும் ஒரு ஆட்டம் போட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே, ஒப்பனையாளர் சக்தி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு உயிர். அந்தக் கால சினிமா போஸ்டர்கள்.. 1970களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வாகனங்கள் என அனைத்தையும் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு
பஹீரா படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. என் படங்களுக்கு லாஜிக் வேண்டாம் மேஜிக் காட்டுகிறேன் என்று அதகளம் செய்து இருக்கிறார்.
க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற டூயட் பின்னணி பாடல் தேவையா?
சின்ன சின்ன லாஜிக் குறைகள் இருந்தாலும் 1980களில் பார்த்து ரசித்த படங்களை போல தற்போது 2K கிட்ஸ்க்கு விருந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
இன்று நேற்று நாளை.. 24.. மாநாடு என இதுபோல நிறைய டைம் ட்ராவல் படங்கள் வந்திருந்தாலும் இதில் டெலிபோனை வைத்து டெம்ப் ஏத்தி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
கேங்ஸ்டர் ஸ்டோரி லைனில் ஃபேன்டஸி கலந்து சிக்ஸர் அடித்துள்ளார் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்.
