சார்ல்ஸ் என்டர்பிரைசஸ் பட விமர்சனம்

தன்னிடம் இருக்கும் விநாயகர் சிலையை புதிய கோவிலில் வைத்து வழிபட வேண்டும் என்பது அம்மா ஊர்வசியின் விருப்பம். மகன் பாலு வர்கீசுக்கோ அந்த சிலை புராதனமானது விலைமதிப்பற்றது என்று தெரிய வர… அதை வைத்து பிசினசை தொடங்க நினைக்கிறார். இந்நிலையில் அந்த விநாயகர் சிலை மூலம் சில பிரச்சினைகள் வருகிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்காக தனது புதிய நண்பரான சார்ல்ஸை சந்திக்கும் பாலு வர்கீஸ், நண்பன் உதவியுடன் அந்த விநாயகர் சிலையை கடத்த முடிவு செய்கிறார். கடத்த முடிந்ததா? என்பது கதை.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலு வர்கீஸ், கொடுத்த கேரக்டருக்குள் இயல்பாக பொருந்திப் போகிறார்.
அவரின் நண்பனாக சார்ல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கலையரசன், பிற்பகுதி கதையை தனது அழுத்தமான நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார்.
அம்மாவாக நடித்்திருக்கும் ஊர்வசி, தனது இயல்பான நடிப்பு மற்றும் வசனம் மூலம் ரசிக்க வைக்கிறார்.
ஊர்வசியின் கணவராக நடித்திருக்கும் குரு.சோமசுந்தரம் தனது கேரக்டருக்கு நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார்.
ஸ்வரூப் பிலிப்பின் கேமராவும் இசையமைப்பாளர் சுப்பிரமணியன் இசையும் படத்திற்கு பலம்.
விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி பேசும் ஒரு படைப்பை கொடுத்த விதத்துக்காக இயக்கிய சுபாஷ் லலிதா சுப்பிரமணியத்தை தமிழ்த்திரைக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்.
