ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட ரிலீஸ் தேதி

பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.
‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘ஜவான்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 7-ந் தேதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார், ஷாருக்கான்
