கர்ணன் திரைப்படக்கூட்டணியின் அடுத்த பிரமாண்ட படைப்பு தனுஷ் -மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம்

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. மேலும் தனுஷின் Wunderbar Films சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.
ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
