காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் அங்கு கையெழுத்துப் போட வரும் நபருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் ஒரு பிணம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் வர, கையெழுத்துப் போட வரும் கைதியை போலீஸ்காரருடன் அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர்.
காட்டில் உடலைக் கண்டு பிடித்த நிலையில், இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் பேச சிக்னலுக்காக சற்றுத் தள்ளிப் போக வேண்டியிருக்க, கைதியின் கையை பிணத்தின் கையோடு இணைத்து கை விலங்கை போட்டு விட்டுப் போகிறார், போலீஸ்காரர்.
போலீஸ் அப்புறம் போன நிலையில் பிணமாக கருதப்பட்டவருக்கு உயிர் இருப்பதை கைதி தெரிந்து கொள்ள…
அதேநேரம் உயிரோடிருப்பவரின் போனில் வரும் பெண் நடந்ததை தெரிந்து கொண்டு, கைதியிடம் அவரை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறார்.
இதேநேரத்தில் உயிர் பிழைத்த அந்த நபரை கொலை செய்ய ஒரு கூட்டம் காட்டுக்குள் படையெடுக்கிறது. பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நடிகையின் கணவர் தான் சாவில் இருந்து பிழைத்தவர் என்று தெரிய வர…
இந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பமாக சாவில் இருந்து பிழைத்தவரைக் கொலை செய்யும் சதியில் போலீசும் சேர்ந்து கொள்ள…
கையெழுத்துப் போட வந்த குற்றவாளி ஆதி என்ன செய்தான்? கொலைக்கு குறி வைக்கப்பட்டவர் தப்பிப் பிழைத்தாரா என்பதே படம்.
ஸ்டேஷனில் கையெழுத்துப் போடும் குற்றவாளி ஆதி கேரக்டரில் வரும் நிஷாந்த் ரூசோ யதார்த்த நடிப்பில் கேரக்டரை முன்னிறுத்துகிறார்.. அவருக்கும் கோடங்கி வடிவேலுக்குமான ஆரம்பக் காட்சிகள் ரகளையுடன் கூடிய ரசனை.
பிணமாக வந்து உயிர் பிழைக்கும் மாறன் கேரக்டரில் விவேக் பிரசன்னா. உயிர் பிழைத்த பிறகு நடிக்க இவருக்கு நிறைய வாய்ப்பு. அதை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நடிகையாக காயத்ரி அய்யர் பொருத்தமான தேர்வு. பயத்தை கண்களில் கொண்டு வருவது தனி நடிப்பழகு.
அஷ்வின் நோயல் கேமரா காடுகளை பிரமிப்புடன் காட்ட, ரெஞ்சித் உன்னியின் இசை கதையோடு இணைந்து சிறப்பு சேர்க்கிறது.
தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கிறார். ஒரு சஸ்பென்ஸ் கதையை எடுத்துக் கொண்டு இறுதி வரை சுவாரசியம் குறையாமல் சொன்ன விதத்தில் சுலபத்தில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/ds.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/ds-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் அங்கு கையெழுத்துப் போட வரும் நபருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் ஒரு பிணம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் வர, கையெழுத்துப் போட வரும் கைதியை போலீஸ்காரருடன் அனுப்புகிறார் இன்ஸ்பெக்டர். காட்டில் உடலைக் கண்டு பிடித்த நிலையில், இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் பேச சிக்னலுக்காக சற்றுத் தள்ளிப் போக வேண்டியிருக்க, கைதியின் கையை பிணத்தின் கையோடு இணைத்து கை விலங்கை...