விருதுநகர் மாவட்ட நகராட்சியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தங்கள் வசம் வைத்திருக்கிறது பெரியவர் சரத் லோகிததாஸ் குடும்பம். ஆனால் மாநிலத்தை ஆளும் கட்சி இந்த மாவட்டத்தின் ஒரு குடும்ப ஆதிக்கத்தை ரசிக்கவில்லை. அந்த பெரியவர் குடும்பத்தில் இருந்து நகராட்சியை பிரித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வர சமயம் பார்த்து காய் நகர்த்துகிறார்கள்.
பெரியவரின் மூத்த மகன் புவன் தற்போது நகராட்சி சேர்மனாக இருக்கிறார். அவரின் மனைவி இறந்த நிலையில் பவனுக்கு இரண்டாம் தாரமாக வாணி போஜனை திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆன சில மாதங்களில் பவன் கார் விபத்தில் இறக்க, வாணி போஜனுக்கு அரசியல் ஆசை வருகிறது. தனது அரசியல் ஆசையை கணவர் குடும்பத்தாரிடம் மறைத்து கணவன் வகித்த பதவியை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தால் விருதுநகர் மாவட்ட அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தையும், பிரச்சினைகளையும் சொல்வதே இந்த ‘செங்களம்.’

தொடரில் ராயராக வரும் கலையரசன் தனது தம்பிகளுடன் சேர்ந்து முக்கிய அரசியல் புள்ளிகளை போட்டுத் தள்ளுகிறார். அவர் செய்யும் தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன?, சேர்மன் பவன் மரணத்தின் பின்னணி என்ன? வாணி போஜனின் அரசியல் அவதாரம் அடுத்து எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?
கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ்.

மொத்தம் 9 பாகங்களை கொண்ட இந்த தொடரின் ஒவ்வொரு பாகங்களிலும் கலையரசன் மற்றும் அவரது இரண்டு தம்பிகளும் சேர்ந்து செய்யும் தொடர் கொலைகளை நிகழ்கால கதையாகவும், அதனுடன் விருதுநகர் மாவட்ட அரசியல் சதுரங்க ஆட்டத்தின் பிளாஷ்பேக்காகவும் சொல்லியிருப்பது தொடரை புதிராக நகர்த்துகிறது.
தொடரின் முதன்மை கதாபாத்திரமாக சூர்யகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன் முதல்பாதியில் பெரியவர் குடும்பத்து அமைதியான மருமகள். மறுபாதியிலோ அரசியல் களத்தில் சைலண்ட் சாகசங்கள் மூலம் மிரட்டும் அதிரடிப்பெண். இரண்டிலும் நடிப்பில் ஏகப்பட்ட வேறுபாடு காட்டுகிறார். அவரது அரசியல் முன்னேற்றத்திற்கு வழி காட்டும் தோழி ஷாலியின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
மற்றொரு முதன்மை கதாபாத்திரமான ராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது தம்பிகளாக நடித்திருக்கும் டேனியல் மற்றும் லகுபரன் இருவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக காமெடி வேடங்களில் நடித்து வந்த டேனியல், இதில் குணச்சித்திர வேடத்தில் மனதில் இடம் பிடிக்கிறார்.

சக்கர நாற்காலியில் வலம் வரும் சரத் லோகிததாஸின் கதாபாத்திரம், கதையின் மையப்புள்ளி. அதை புரிந்து கொண்டு அளந்து பேசுகிற அந்த நடிப்பில் மிரட்டுகிறார்.

வேல.ராமமூர்த்தி, முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், விஜி சந்திரசேகர், செந்தில்குமரன், அர்ஜை, பவன், மானஷா ராதா கிருஷ்ணன் பொருத்தமான கதாபாத்திரங்களில் தங்கள் கச்சிதமான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். இவர்களில் ‘போலீஸ் கெத்’தில் தனித்து தெரிகிறார் அர்ஜை.
வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா விருதுநகர் மாவட்டத்தை சிறப்புடன் வலம் வர…
இசையமைப்பாளர் தரணின் பின்னணி இசை காட்சிகளை உயிர்ப்புடன் வைக்க… காட்சிகளை பரபரப்பாக நகர்த்தி தொடரின் இறுதி பாகத்தில் கூட ஒரு ட்விஸ்ட் வைத்து தேர்ந்த இயக்குனராக தன்னை நிரூபித்து இருக்கிறார், எஸ்.ஆர்.பிரபாகரன்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/75c8fa8f1b33df784723e6a4ec02994d.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/75c8fa8f1b33df784723e6a4ec02994d-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்விருதுநகர் மாவட்ட நகராட்சியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தங்கள் வசம் வைத்திருக்கிறது பெரியவர் சரத் லோகிததாஸ் குடும்பம். ஆனால் மாநிலத்தை ஆளும் கட்சி இந்த மாவட்டத்தின் ஒரு குடும்ப ஆதிக்கத்தை ரசிக்கவில்லை. அந்த பெரியவர் குடும்பத்தில் இருந்து நகராட்சியை பிரித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வர சமயம் பார்த்து காய் நகர்த்துகிறார்கள். பெரியவரின் மூத்த மகன் புவன் தற்போது நகராட்சி சேர்மனாக இருக்கிறார். அவரின் மனைவி இறந்த நிலையில்...