காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள்? என்பதைச் சொல்கிறார்கள். என் 4 என்பது காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் பெயர். இ்ந்த பெயரில் தலைப்பை வைத்துக் கொண்டு ‘திக்…திக்’ பின்னணியில் கதை சொல்லியிருக்கிறார்கள்.
மைக்கேல்-கேப்ரில்லா ஒரு காதல் ஜோடி. அப்சல்-வினுஷா இ்ன்னொரு காதல் ஜோடி. ஒரு இரவில் அனுஷாவை யாரோ சுட்டு விட, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் வினுஷா அனுமதிக்கப்படுகிறார். வினுஷா உயிர் பிழைத்தாரா? அவரை கொல்ல முயன்றவர்கள் யார்? என்பது திகில் பிளஸ் ‘திக் திக்’ திரைக்கதை.
சின்னத்திரையில் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா வினுஷா தேவி, அப்சல் அமீத் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஆச்சரியப்படுத்துகிறார்கள். காசிமேடு மீன் வியாபாரிகளாகவே மாறியிருக்கிறார்கள். பெற்றோர் இல்லாத அவர்களை சிறு வயதில் இருந்து பாதுகாத்து வரும் வடிவுக்கரசி பாத்திரம், கருணையே வடிவான அம்மாவின் பிரதிபலிப்பு.
அக்‌ஷய் கமல், பிரக்யா நாக்ரா, அபிஷேக் சங்கர், அழகு மற்றும் காவல்நிலைய ஆய்வாளராக வரும் அனுபமாகுமார் பொருத்தமான பாத்திரங்களில் வருகிறார்கள். இவர்களில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் அனுபமா குமாரின் நோயுற்ற மகள் பின்னணிக் கதை நெகிழ்ச்சியின் உச்சம்.
திவ்யங்கின் ஒளிப்பதிவு காசிமேட்டை நெஞ்சுக்கு நெருக்கமாக்கி விடுகிறது. பாலசுப்பிரமணியம்.ஜி.யின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் பேசவைக்கிறார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் சில மனிதர்களின் வாழ்வியல் சம்பவத்தை மையமாக வைத்து விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுக்க இயக்குநர் லோகேஷ் குமார் முயற்சித்திருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டரின் நேர்மை எப்படி தடுமாறுகிறது என்பதை காட்சிப்படுத்திய இடத்தில் தேர்ந்த இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு விடுகிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-2.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-2-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள்? என்பதைச் சொல்கிறார்கள். என் 4 என்பது காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் பெயர். இ்ந்த பெயரில் தலைப்பை வைத்துக் கொண்டு ‘திக்...திக்’ பின்னணியில் கதை சொல்லியிருக்கிறார்கள். மைக்கேல்-கேப்ரில்லா ஒரு காதல் ஜோடி. அப்சல்-வினுஷா இ்ன்னொரு காதல் ஜோடி. ஒரு இரவில் அனுஷாவை யாரோ சுட்டு விட, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் வினுஷா...