இயல்பான கதைக்களம். புதிய நடிகர்கள். நிறைவான ஒரு படம். சாத்தியமா இது? சாத்தியம் என்று நிரூபித்து இருக்கிறார், இயக்கிய பிரகாஷ். ‘நாளைய இயக்குநர் சீசன் 6’ ல் ரன்னர் அப்’ டைட்டில் வென்றவர் என்பது இவருக்கான சிறப்பு அடையாளம்.
படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் கொஞ்சமே கொஞ்சப் பேர் தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட அத்தனைபேரும் அறிமுகங்கள். சேதுராமன், ஜி.ஆர்.கதிரவன், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் என்று அத்தனை நட்சத்திரக் கூட்டத்தையும் நடிக்க வைத்ததில் தெரிகிறது, இயக்குனரின் திறமை.
ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் இருக்கும் நம்ம நாயகனுக்கு சாதாரண கூஸ் டிரிங்க்ஸ் குடித்தாலே போதை தலைக்கு ஏறும் அப்புறம் ஃபுல் அடித்தது போல் நடந்து கொள்வார். ஒருமுறை இப்படி எடிஎம்மில் பணம் நிரப்புகையில் போதை தலைக்கு ஏறி விட, தன்னை அறியாமலே 100 ரூபாய் நிரப்ப வேண்டிய ட்ரேயில் 500 ரூபாய்களை வைத்து விடுகிறார். லட்சக்கணக்கில் அந்த பணம் பொதுமக்கள் கைக்குப் போக, ஹீரோவுக்கு வேலை போகிறது. இ்ந்த கூடுதல் பணத்தை ஏடி.எம்.மில் எடுத்தவர்களிடம் இருந்து திரும்ப மீட்டால் மட்டுமே வேலை என்ற கண்டிஷனில், அதிக பட்ச பணத்தை எடுத்தவர்களை தேடி நாயகன் பயணிக்க, கூடவே குடிமகன்கள் சங்கத்தில் இருந்து நமோ நாராயணன் கோஷ்டியும் அவருக்கு இது விஷயத்தில் உதவ முன்வர…

பணம் கிடைத்ததா? வேலை திரும்பக் கிடைத்ததா? என்பது சிரிப்புக்கு பஞ்சமில்லாத கதைக்களம்.

நாயகனாக விஜய் சிவன். எந்த இடத்திலும் அறிமுக நாயகன் என்ற சுவடின்றி நடிப்பில் விளாசுகிறார். குடிகார அப்பா சுரேஷ் சக்ரவர்த்தியை கலாய்ப்பது, மனைவி பிள்ளைகளிடம் அன்பு பாராட்டுவது என் சிறந்த குடிமகனாக இருந்தவர், போதையின்றி குடிமகானாக மாறுகிற இடங்கள் ரசனையானவை. தான் குடிக்கவில்லை என மனைவி சாந்தினியை நம்பவைக்க படாதபாடு படுவது, நண்பர் குடும்பத்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூல் டிரிங்க்ஸ் தந்த போதையில் விழா நடத்துபவர்கள் மகத்திலேயே கேக் அபிஷேகம் செய்வது என போதை நடிப்புக்கு புது ரூட் போட்டிருக்கிறார். மனைவியாக வரும் சாந்தினி, பொறுப்பான குடும்பத்தலைவியாக பரிமளிக்கிறார். கணவருக்கு வேலையில்லை என தெரிய வரும் இடத்தில் அந்த நடுத்தர குடும்பத்த் தலைவியை கண் முன் நிறுத்துகிறார்.
நாயகனின் குடிகாரத் தந்தையாக சுரேஷ் சக்ரவர்த்தி இன்னொரு நடிப்பு அட்டகாசம். மகனுக்கு வேலைபோன நேரத்தில் மணக்கோலத்தில் இவர் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இடத்தில் தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகுநேரமாகி றது.
நாயகனுக்கு உதவ குடிமகன்கள் சங்கத்தில் இருந்து வரும் அதிலும் அந்தஆறடி உயர ஆஜானுபாகு ரவுடியிடம் இந்த கூட்டணி அடி வாங்கும் இடம், சிரித்து சிரித்தே வயிற்றுவலி வரும் இடம்.

குடிக்காமலே போதை எப்படி என்பதற்கு மருத்துவரீதியிலான புதிய விளக்கம் சொல்லி இருக்கும் இயக்குனர் பிரகாஷ், ஒரு போதைக் கதையை பாதை மாறாமல் கடைசி வரை கலகலப்பாய் கொண்டு சென்று தன் அடையாளத்தை பலமாய் தமிழ்த்்திரையில் பதித்திருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/KUDIMAHAAN-11.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/KUDIMAHAAN-11-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இயல்பான கதைக்களம். புதிய நடிகர்கள். நிறைவான ஒரு படம். சாத்தியமா இது? சாத்தியம் என்று நிரூபித்து இருக்கிறார், இயக்கிய பிரகாஷ். ‘நாளைய இயக்குநர் சீசன் 6’ ல் ரன்னர் அப்’ டைட்டில் வென்றவர் என்பது இவருக்கான சிறப்பு அடையாளம். படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் கொஞ்சமே கொஞ்சப் பேர் தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட அத்தனைபேரும் அறிமுகங்கள்....