சிறையில் இருந்து தப்பிக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டம் தெரிய வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே இன்னொரு பக்கம் காஜல் அகர்வால் வீட்டில் பேய்கள் புகுந்து அவரை பயமுறுத்திக் கொண்டே இருக்க…
ஒரு பக்கம் பேய்கள் தொல்லை, மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு கோஷ்டிகளிடமும் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால், அதில் இருந்து எப்படி தப்புகிறார்? அவரை பயமுறுத்தும் பேய்கள் யார்? என்பதே இந்த காமெடி திரைக்களம்.
கதையின் நாயகியாக காஜல் அகர்வால். கிட்டத்தட்ட காமெடி நாயகியாகவே மாறியிருக்கிறார். தான் சுட்டதில் குறி தவறி இறந்த ஜெய்க்காக அவர் வருந்தும் இடங்களில் நெகிழ்ச்சி எட்டிப்பார்க்கிறது.

படம் இயக்க விரும்பும் யோகிபாபு, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி கூட்டணி காஜலை பார்த்த மாத்திரத்தில் ‘நீ தான் என் பட நாயகி’ என அவரை துரத்தும் ஆரம்ப காட்சிகள் கலகலப்பானவை.

காமெடி வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்து முன்னாள் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய வீடேறி வரும்போது அங்கு நடக்கும் விபரீதம் காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. காமெடி தாதாவாகவே மாறியிருக்கிறார், கே.எஸ்.ரவிகுமார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெய், அந்த அனாதை சிறுமி சமபந்தப்பட்ட போர்ஷன் காமெடிப்படம் என்பதையும் தாண்டி கண்ணில் நீரூற்றை உற்பத்தி செய்து விடுகிறது..

ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி, ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் என நட்சத்திரக்கூட்டம் அதிகம். ஆனாலும் பிணவறை பின்ணியில் ஊர்வசி-மயில்சாமி சம்பந்தப்பட்ட காட்சி நகைச்சுவையின் உச்சம்.
சாம்.சி.எஸ்-இன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசனை.

தொடர்ந்து காமெடி படங்களாகவே இயக்கி வரும் கல்யாண், ரசிகர்களை விடாப்பிடியாக சிரிக்க வைக்கும் நோக்கில் இயக்கி இருக்கும் படம். சிரிக்கலாம். ரசிக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/Untitled-1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்சிறையில் இருந்து தப்பிக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டம் தெரிய வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார். இதற்கிடையே இன்னொரு பக்கம் காஜல் அகர்வால் வீட்டில் பேய்கள் புகுந்து அவரை பயமுறுத்திக் கொண்டே இருக்க... ஒரு பக்கம் பேய்கள் தொல்லை, மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு...