சினி நிகழ்வுகள்

‘தி லெஜண்ட்’ பட வெற்றியில் நாயகன் உற்சாகம் ஒளிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூக சிந்தனையுடன் கூடிய கதைக்களம் கொண்ட ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை லெஜண்ட் சரவணன் பெற்றுள்ளார். படத்தின் கதையை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். லெஜண்ட் சரவணன் முயற்சிக்கு மக்கள் வெளிப்படுத்திய அன்பு தான் இப்படத்தின் வெற்றியாகும்.
உலகமெங்கிலும் திரையரங்குகளில் சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில்
தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியான சமயத்தில் கூறப்பட்ட சில எதிர்மறை விமர்சனங்களை கடந்து விமரிசையான வெற்றியை திரைப்படம் பெற்றுள்ளது. இந்த வெற்றியால் லெஜண்ட் சரவணன், படக்குழுவினர் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கானஅறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *