தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம். இந்த அமைப்பு சென்னை பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் விழா ஒன்றை நடத்தியது.
விழாவில் தலைவர் நசீர் ஹொசைன் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் தங்கராஜ் சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். விழாவில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறுவயதில் புதிய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்காக சட்டை கிழிந்ததும், சட்டை பட்டன்கள் பறி போன சொந்த அனுபவத்தை விவரித்தபோது சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.
சட்டமன்ற கூட்டதொடர், மானிய கோரிக்கை விவாதம், பட்ஜெட் என நெருக்கடியான சூழலில் விழாவிற்கு வர முடியாது என கூறினாலும், மக்களுக்கான அமைச்சராக இருக்க வேண்டும் என்பதால் விழாவிற்கு வந்தேன். இங்கு வந்த பின்தான் தெரிகிறது என் போன்ற அமைச்சர்கள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
எனது அரசியல் பணி, ஆட்சிப்பணிகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இந்த விழா இருக்கிறது என்றார்.
விழாவில் நடிகைகள் ‘ஜெய்பீம்’ லிஜோமோல், சினேகா, யாஷிகா ஆனந்த், அபிராமி, அம்பிகா, நடிகர் மணிகண்டன், 6 முதல்வர்களுடன் பணியாற்றிய நெல்லை சுந்தர்ராஜன், மற்றும் டைமண்ட் பாபு, விஜயமுரளி முனுசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதிவேந்தன் வழங்கினார்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/208573dc-2d60-46f3-bd16-1cfefd10de46-1024x681.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/208573dc-2d60-46f3-bd16-1cfefd10de46-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம். இந்த அமைப்பு சென்னை பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் விழா ஒன்றை நடத்தியது. விழாவில் தலைவர் நசீர் ஹொசைன் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் தங்கராஜ் சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். விழாவில் தமிழ்நாடு அரசு...