ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு இளம்பெண் தங்க விரும்பினால்… –அதே ஹாஸ்டலில் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்பதை சிரிப்பும் களிப்புமாய் சொல்லியிருப்பதே இந்த ‘ஹாஸ்டல்.’
கந்துவட்டி அப்பா ரவிமரியா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் வீட்டில் இருந்து ‘எஸ்’ ஆகிறார், பிரியா பவானி சங்கர். ரவிமரியாவிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பட்டு அவமானப்பட்ட அசோக் செல்வனை சந்திப்பவர், அவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் ஒரு நாள் தங்கிக்கொள்ள 50 ஆயிரம் தருவதாக சொல்ல…
ஆனால் ஹாஸ்டலுக்குள் வந்து விட்ட பிரியாவால் அங்கிருந்து தப்பி வர முடிந்ததா? அவர் ஏன் அந்த ஹாஸ்டலுக்குள் என்பது யூகிக்க முடியாத கிளைமாக்ஸ். பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை கலகல காட்சியாக்கி ரசிக்க வைக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடிக் குளத்தி்ல் நீந்தினாலும் கரையேறி விடுகிறார், நாயகன் அசோக்செல்வன். நாயகி பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலில் இருந்து வெளியே வர முடியாத சூழலில் அந்த கோபத்தை அசோக்செல்வன் அண்ட்கோவிடம் காட்டும் இடம் செம கலகல. ஹாஸ்டல் நிர்வாகி பாதர் நாசரும் வார்டன் முனீஸ்காந்த்தும் வரும் இடங்கள் எல்லாம் ‘ஹாஹா’ சிரிப்பில் திரையரங்கம் வெடித்துச் சிரிக்கிறது. ஆவியாக வந்து முனீஸ்காந்த்தை உண்டு இல்லை பண்ணும் அறந்தாங்கி சம்பந்தப்பட்ட காட்சிகள் லக லக. கந்து வட்டி பார்ட்டியாக வரும் ரவிமரியா தனது அடிப்பொடிகளுடன் களம் காணும் இடமெல்லாம் அதிரடிச் சரவெடி.
அசோக் செல்வனின் நண்பர்களாக சதீஷ், கிரிஷ் மற்றும் KPY யோகி ஆங்காங்கே நகைச்சுவை தூவிப்போகிறார்கள். ஆவியை விரட்ட பாதர் மேற்கொள்ளும் காட்சிகளில் மதம் சம்பந்தப்பட்ட உரையாடலை தவிர்த்திருக்கலாம். மலையாளக் கதையில் இருந்து வேண்டியதை மட்டும் எடுத்து தமிழில் பரிமாறியிருக்கிறார், இயக்குனர் சுமந்த் ராமகிருஷ்ணா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/VM_185901000000.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/04/VM_185901000000-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு இளம்பெண் தங்க விரும்பினால்... –அதே ஹாஸ்டலில் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்பதை சிரிப்பும் களிப்புமாய் சொல்லியிருப்பதே இந்த ‘ஹாஸ்டல்.’ கந்துவட்டி அப்பா ரவிமரியா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் வீட்டில் இருந்து ‘எஸ்’ ஆகிறார், பிரியா பவானி சங்கர். ரவிமரியாவிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பட்டு அவமானப்பட்ட அசோக் செல்வனை...