சினி நிகழ்வுகள்

பா.ரஞ்சித் தலைமையில் மதுரையில் நடந்த தலித் இலக்கிய கூடுகை

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியக் கண்காட்சி, திரைப்பட விழா, மற்றும் புகைப்படக் கண்காட்சி என தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரையில் தலித் எழுத்தாளர்களுக்கான, தலித் இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்றது. ஏப்ரல் 29, 30 தேதிகளில் மதுரை உலகத் தமிழ்சங்கம் அரங்கில் துவங்கியது.
துவக்க உரையாற்றிய பா.ரஞ்சித் பேசுகையில், ‘‘தலித் எழுத்துக்கள் தான் என் திரைப்பயணத்தின் துவக்கம். உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.
வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழுக்க கலையோடு பின்னிப் பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல்.
90-களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது. இப்போது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியுள்ளது.
அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் இலக்கியம் பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெறத் துவங்கியுள்ளன.
‘இன வரைவியல்’ என்ற வகைமையை உருவாக்கிய பெரும் பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் வெறும் எதிர்மறை அம்சங்களை குறித்து மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியை குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம்’’ என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *