ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் ‘குதிரைவால்’ வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
கலையரசன்-அஞ்சலி பாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார்.
மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும்,
கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய திரை முயற்சியான இந்த படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள், இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம்.
‘‘இதுபோன்ற படங்கள் திரைப்பட விழாக்களிலும், விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம்’’ என்கிறது தயாரிப்பு நிறுவனம்.
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக இருக்கும், குதிரைவால் முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் என்கிறார்கள்.
மார்ச் 18 முதல் தியேட்டரில் வெளியாகிறது குதிரைவால்.