சினிமா செய்திகள்

சரத்குமாரின் 150-வது படம் ‘தி ஸ்மைல் மேன்’ பிரமாண்டமாக தயாராகிறது

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘தி ஸ்மைல் மேன்.’ இது சரத்குமாரின் 150-வது படம் என்பது சிறப்புக்குரியது.
அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க துப்பறியும் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் உருவாகவுள்ளது, படம்.
சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெமரீஸ் படப்புகழ் ஸ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
வெற்றி நடிப்பில் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடித்து வெற்றி பெற்ற ‘மெமரீஸ்’ படத்தை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் இப்படத்தை இயக்குகின்றனர். திரைக்கதை-வசனம் ஆனந்த். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு. ஷான் லோகேஷ் படத்தொகுப்பு. ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார்.

கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரொடக்ஷன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா செய்ய, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM). விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார்.