திரை விமர்சனம்

யாரோ படவிமர்சனம்

யாரோ தன்னைப் பின் தொடர்வது போலவும் கண்காணிப்பது போலவும் பயந்து நடுங்குகிறான் கதாநாயகன். இதுபோதானெ்று விபரீத கனவுகளும் வந்து பயமுறுத்துகிறது.
இதற்கிடையே நகரையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் சீரியல் கொலைகாரனை காவல்துறை வலைவீசித் தேடிவருகிறது. ஒருகட்டத்தில் அந்த சீரியல் கொலைகாரன் யார் என்பது தெரிய வரும்போது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.
மிகச் சில பாத்திரங்களை வைத்துக்கொண்டு மிகக் குறைந்த அளவிலான லொகேஷனில் ஒரு பரபரப்பான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார், இயக்குநர் சந்தீப் சாய்.
படத்தின் நாயகன் வெங்கட் ரெட்டி தனது நடிப்பால் முழுப்படத்தையும் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அவரது முகபாவனைகள் நிஜமாகவே தமிழ் சினிமா கண்டு பிடித்த புது நாயகனை நம் கண்முன் நிறுத்துகிறது. அப்பாவி தோற்றத்திலும் அடப்பாவி தோற்றத்திலும் நடிப்பு வித்தியாசத்தில் ‘இவரா அவர்’ என்று மிரள வைக்கிறார்.
நாயகி உபாசனா வழக்கமான நாயகியாக வந்து போகிறார். கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருபவரும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறார்.
ஒரு உளவியல் ரீதியான கதையை எடுத்துக் கொண்டு காட்சிப்படுத்திய விதத்தில் முதல்படமே இயக்குனரின் முத்திரைப் படமாகி இருக்கிறது.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதைக்கு ஆகப்பெரும் பலம்.

புதிய கதைக்களத்தில் புதிய முயற்சி இந்த ‘யாரோ.’