சினிமா செய்திகள்

அதிரடி பரபரப்பு ஏற்படுத்திய விக்ரம் பட டீசர்

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது.

பிப்ரவரி 10-ந் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைப்படம் –‘மகான்.’ இந்த படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ வெளியிட்டது. பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. மனதைக் கவரும் கதைக்களத்தோடு அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த ‘மகான்’ படம் உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது. நட்பு, போட்டி, மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப் பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை இந்த டீசர் காட்சிப்படுத்தியிருப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண மனிதனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அவனை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகிறது. உண்மையான தந்தை-மகனான விக்ரமும் அவரது மகன் துருவ்வும் படத்திலும் ்அப்பா-மகனாகவே தோன்றி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியிடப்படும். தமிழில் மட்டுமல்லாமல் மற்றும் இது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னட மொழியில் இந்தத் படத்துக்கு ‘மகா புருஷா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.