நடிகர் நாசரின் மகன் அபிஹசனின் அன்பான வேண்டுகோள்

நடிகர் நாசரின் மகன்அபி ஹசன் நடிகர் கமல்ஹாசன் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில ்கமல்ஹாசனின் இளைய மகள் அக்–ஷரா ஹாசன் அவரது ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தையடுத்து இப்போது திரைக்கு வரும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்திருக்கிறார். அதையொட்டி ரசிகர்கள், மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஒரு அறிக்கை மூலம் அவர் கூறியிருப்பதாவது.
கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நான் அறிமுகமானேன். இதுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள், அதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது, ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் ஒரு அங்கமாக உள்ளேன். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தின் ஒரு கதையின் நாயகனாக பிரதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
நீங்கள் அனைவரும் படத்தைப் பார்த்து எனக்கும் திரைப்படத்திற்கும் உங்கள் மேலான ஆதரவை அளித்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்’ என்று அந்தஅறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
