இசைமைப்பாளர் தர்புகா சிவாவை இயக்குனர் ஆக்கியிருக்கும் படம். முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”. இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

11-ம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை. அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள்
பள்ளிப்பருவ அத்தனை கொண்டாட்டங்களும் இப்போது ஆரம்பம். அனுவும் வினோத்தும் காதலர்கள். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் இன்னொரு பெண் எட்டிப் பார்க்க, மோதலில் முடிகிறது, காதல். இருவரும் பிரிகிறார்கள். ‘சாரி’ என்று ஒரு வார்த்தை கூறாததால் அந்த முன்னாள் காதலர்களின் வாழ்க்கை எங்கே போய் நிற்கிறது என்பதே ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கதைக்களம்.
நாயகனாக கிஷன் தாஸ், வினோத் என்ற கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.
சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷை படத்தின் இன்னொரு நாயகன் என்றே செல்லலாம். நமது பள்ளி வாழ்க்கையில் இவரது கேரக்டரை போன்ற ஒரு கதாபாத்திரத்தை நிச்சயம் நாமும் கடந்து வந்திருப்போம். பார்க்கும் பெண்களை எல்லாம் காதல் செய்யும் அந்த கேரக்டரில் புகுந்து விளையாடுகிறார். சுரேந்தராக வந்து போன கெளதம் ராஜ் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.
நாயகியாக வரும் அம்ரிதா (அனு), அழகான தேவதையாக வந்து செல்கிறார். கேத்ரினாக பூர்வா ரகுநாத், துரை யாக ஷரன் குமார், ப்ரான்சிஸ்சாக ராகுல் கண்ணன், ரேகாவாக மீதா ரகுநாத், ரிச்சர்டாக கவருண் ராஜன், திருமாலாக நரேன், விக்கியாக ஹரினி ரமேஷ் கிருஷ்ணன் இந்த கதைக்கென வாய்த்த இளந்தளிர்கள்.
சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு 90 கால பள்ளி வாழ்வை கண்ணுக்குள் நிறுத்துகிறது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேநேரம் பின்னணி இசையில் பின்னியிருக்கிறார், மனிதர்.
முதல் பாதியில் மிடுக்கோடு நடை போட்ட கதை, இரண்டாம் பாதியில் சற்றே தடுமாறுகிறது. இயக்குனர் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மறுபடியும் ஒரு ‘96’ நெஞ்சில் ஏறியிருக்கும். சின்னச் சின்ன குறைகளை கடந்து பார்த்தால் இயக்குனராகவும் தர்புகா சிவா ஜெயித்திருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/beq-8-1596624855-113005.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/beq-8-1596624855-113005-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இசைமைப்பாளர் தர்புகா சிவாவை இயக்குனர் ஆக்கியிருக்கும் படம். முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”. இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 11-ம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை. அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள் பள்ளிப்பருவ அத்தனை கொண்டாட்டங்களும் இப்போது ஆரம்பம். அனுவும் வினோத்தும் காதலர்கள். அமைதியாக...