சினி நிகழ்வுகள்

பன்மொழி ஆக்–ஷன் படத்தில் வரலட்சுமி சரத்குமார்

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும் பன்மொழி இந்திய படமான “மைக்கேல்” படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்
பல மொழிகளிலும் வெற்றி பெற்ற தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.
பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
படம் துவங்கப்பட்டதிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்பிலும், படம் மிகப்பிரமாண்ட நிலையை எட்டி வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம்மேனன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் வித்தியாசமான திரைக்கதையில், நடிகர் சந்தீப் கிஷன் ஒரு அழுத்தமிகுந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.
‘மைக்கேல்’ திரைப்படம் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக, நாராயண் தாஸ் K நரங் படத்தை வழங்குகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்: சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார்.
தொழில்நுட்பக் குழு
இயக்குனர்: ரஞ்சித் ஜெயக்கொடி தயாரிப்பாளர்கள்: பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்
வழங்குபவர்: நாராயண் தாஸ் K நரங்
தயாரிப்பு நிறுவனங்கள் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
நிர்வாக தயாரிப்பாளர்: சிவா செர்ரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்.